இதோ அடுத்த ஆட்டம்.. ஒவ்வொரு 30 நாட்கள்.. 10 லட்சம் வீடுகளுக்கு டேட்டா.. Jio கஸ்டமர்களுக்கு அம்பானி டார்கெட்!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் நெருங்க முடியாத அளவுக்கு சிம் கார்டு கஸ்டமர்களை எட்டிவிட்டது. இப்போது, ஒவ்வொரு வீடுகளிலும் அடிமட்ட விலையிலான திட்டங்கள் மூலம் நுழைய திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 10 லட்சம் வீடுகளுக்கு சேவைகளை கொடுக்க இருக்கிறது. இன்டர்நெட் தொடங்கி லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி போன்ற ஒட்டுமொத்த சேவைகளும் களமிறங்கியிருக்கிறது. விவரம் இதோ.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தின் 47ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மிகப்பெரும் சம்பவம் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஏற்கனவே, முக்கால்வாசி சிம் கார்டு கஸ்டமர்களை வைத்திருக்கும் நேரத்தில் ஜியோ நிறுவனம், ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 10 லட்சம் வீடுகளில் பிராட்பேண்ட் சேவைகளை கொடுக்க திட்டமிட்டிருப்பதை தெரிவித்துள்ளது.

சொல்லப்போனால், ஜியோ நிறுவனம் வெறும் இன்டர்நெட் சேவையை மட்டும் கொடுக்கப்போகிறது என்றால், அதில் பேசுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், கேபிள் டிவிகளை தூக்கி சாப்பிடும்படி டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தாவையும் அதில் கொடுக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் ஜியோ ஏர்ஃபைபர் (AirFiber) சேவையை கொண்டுவந்தது.
வெறும் 6 மாதங்களில், இந்த சேவை 10 லட்சம் கஸ்டமர்களை பெற்றது. அதாவது, 10 லட்சம் வீடுகளுக்கு சேவைகளை கொடுத்து முடித்துள்ளது. ஆனால், விலை மற்றும் சேவை கட்டணங்கள் அடிமட்ட விலைக்கு கிடைத்ததால், அடுத்த 100 நாட்களில் மேலும் ஒரு 10 லட்சம் வீடுகளில் சென்று இந்த சேவை சேர்ந்துவிட்டது. வெறும் ரூ.599 விலையில் இருந்து திட்டங்கள் தொடங்குவதால், மிகப்பெரிய வளர்ச்சியை பார்க்கிறது.
ஜியோ ரூ 599 திட்ட விவரங்கள் (Jio Rs 599 Plan Details): இந்த திட்டம் ஜியோ ஏர்ஃபைபர் சேவைகளின் கீழ் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. அடிமட்ட விலையில் டேட்டா மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்கள் மற்றும் 14 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை ரூட்டர் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது.
1000 ஜிபி டேட்டா வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். அதன் பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா வேகம் குறையும். ஆனால், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சலுகை தொடர்ந்து பயன்படுத்தலாம். லேண்ட்லைன் சேவை கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம். 800+ லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம்.
ஆகவே, ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த பாக்ஸ் மூலம் 14 ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) சந்தா வருகிறது.
மேலும், ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஹோய்சோய் (Hoichoi), ஷீமாரூமீ (ShemarooMe), டாகுபே (DocuBay), எபிக்ஆன் (EPICON) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஆப்ககளின் சந்தாவும் கிடைக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், முதல் முதலாக இந்த ஏர்ஃபைபர் திட்டத்தை பெறும்போது 3 மாதங்களுக்கான தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும்.
அதேபோல ஜிஎஸ்டி கட்டணமும் இருக்கும். இதை கொடுத்துவிட்டால், டிவைஸ் இன்ஸ்டாலேஷன் முதல் ஆக்டிவேஷன் வரையில் செய்து கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்தலாம். அதற்கு பிறகு மாதம் ரூ.599 மட்டுமே செலுத்தி திட்டத்தை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். 10 லட்சம் வீடுகளுக்கு திட்டத்தை கொண்டு சேர்ப்பதாக முகேஷ் அம்பானியே தெரிவித்ததால், கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








