ரூ.15,000 விலையில் Jio Laptop.. குவால்காம், மைக்ரோசாப்ட் ஆதரவுடன் தரமான சம்பவம்!

|

உள்பொருத்தப்பட்ட 4G சிம் கார்ட் உடன் "ஜியோபுக்" எனப்படும் புதிய பட்ஜெட் விலை லேப்டாப்பை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த லேப்டாப்பிற்காக நிறுவனம் குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது. இந்த லேப்டாப் அடுத்த மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

லேப்டாப் குறித்து கூடுதல் தகவல்கள் இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளது.

ஜியோபுக் என்ற பட்ஜெட் விலை லேப்டாப்

ஜியோபுக் என்ற பட்ஜெட் விலை லேப்டாப்

முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைத்தொடர்பு நிறுவனமானரிலையன்ஸ் ஜியோ குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுடன் இணைந்து "ஜியோபுக்" எனப்படும் பட்ஜெட் லேப்டாப்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜியோ பட்ஜெட் விலை லேப்டாப்பிற்கு என உலகளாவிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பட்ஜெட் விலை லேப்டாப்பில் மிகவும் மேம்பட்ட அம்சங்கள் எதிர்பார்க்க முடியாது என்றாலும் இதில் இருக்கும் அம்சங்கள் தரம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் JIOBOOK

விரைவில் அறிமுகமாகும் JIOBOOK

ரிலையன்ஸ் ஜியோ தனது குறைந்த விலை "ஜியோ போன்" வெற்றியை தொடர்ந்து அதை பிரதிபலிக்கும் விதமாக உட்பொதிக்கப்பட்ட 4ஜி சிம் கார்ட் உடன் கூடிய ரூ.15,000 என பட்ஜெட் விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவலை ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த லேப்டாப் அறிமுகமாக இருக்கிறது.

குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம்

குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம்

இந்த லேப்டாப் உருவாக்கத்திற்கு ஜியோ நிறுவனம் குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கூடுதல் ஆதரவை விண்டோஸ் ஓஎஸ் வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து இந்த லேப்டாப் இன் அம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த லேப்டாப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜியோபோன்

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜியோபோன்

இது குறித்து ராய்ட்டர்ஸ் தெரிவிக்கையில், "இது ஜியோ போன் போன்றே பெரியதாக இருக்கும்" என்று விஷயத்தை நேரடியாக அறிந்த ஆதாரங்களில் ஒன்று ராய்ட்டர்ஸ் இடம் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோபோன் ஆனது பட்ஜெட் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது கடந்த மூன்று காலாண்டுகள் சந்தையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாக கவுண்டர்பாயின்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

பட்ஜெட் விலை லேப்டாப்..

பட்ஜெட் விலை லேப்டாப்..

இந்த நிலையில் ஜியோபோன் 5ஜி மாடல் பதிப்பு விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இது பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜியோ பட்ஜெட் விலை லேப்டாப் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

3 மாதங்களில் இந்த லேப்டாப் அறிமுகமாகும் பட்சத்தில் மார்ச் மாத விற்பனையில் லேப்டாப் சந்தையை இது ஆட்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

JIOBOOK குறித்து வெளியான தகவல்..

JIOBOOK குறித்து வெளியான தகவல்..

ஒப்பந்த உற்பத்தியாளரான ஃப்ளெக்ஸ் மூலம் ஜியோபுக் லேப்டாப் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. வருகிற மார்ச் மாதத்திற்குள் ஜியோபுக் லேப்டாப் நூறாயிரக்கணக்கான யூனிட்களை விற்கும் நோக்கத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த லேப்டாப் ஜியோவின் சொந்த ஜியோ ஓஎஸ் இயக்க முறைமையை கொண்டிருக்கும் எனவும் ஜியோ ஓஎஸ் அப்டேட்டை ஜியோ ஸ்டோரின் மூலம் கையாளலாம் எனவும் கூறப்படுகிறது.

சிப்செட் மற்றும் ஓஎஸ் விவரம்

சிப்செட் மற்றும் ஓஎஸ் விவரம்

ஜியோ நிறுவனம் குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த லேப்டாப்பில் ஆர்ம் லிமிடெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான கம்ப்யூட்டிங் சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் விண்டோஸ் ஓஎஸ் சில பயன்பாடுகளின் ஆதரவை வழங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விரைவில் ஒரு தரமான சம்பவம் உறுதி

விரைவில் ஒரு தரமான சம்பவம் உறுதி

எது எப்படியோ., தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஜியோவின் மூலம் தரமான ஒரு பட்ஜெட் விலை லேப்டாப் இந்திய வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Roll Out its Jio Laptop at Rs.15,000 With 4G Sim Card!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X