அம்பானியின் ரிலையன்ஸ் அமெரிக்காவில் மீண்டும் லாபி செய்ய தொடங்குகிறது

|

இந்திய பெருநிறுவன வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடையே "அமெரிக்க பொருளாதார வர்த்தக தடைக் கொள்கைகள்" மீதான தனது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக புதிய பரப்புரையாளர் மூலம் மீண்டும் பரப்புரையை துவங்கியுள்ளது.

பில்லியனர் முகேஷ் அம்பானி

பில்லியனர் முகேஷ் அம்பானி

பில்லியனர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரில்) நிறுவனம், அமெரிக்காவில் தனது வணிக நடவடிக்கைகளுக்கும் பிற காரணங்களுக்கும் அமெரிக்க சட்டமியற்றுபவர்களை தொடர்புள்ள அதன் பதிவு செய்யப்பட்ட லாபியிங் நிறுவனமான பார்பர் கிரிஃபித் & ரோஜர்ஸ் எல்.எல்.சி (BGR) மூலம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் செயல்பட்ட நிலையில் கடந்த 2013 ஜனவரி மாதம் முதல் லாபியிங் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

அமெரிக்க செனட்டில் தயாரிக்கப்பட்ட புதிய 'லாபியிங் அறிக்கை'யின் படி, ரிலையன்ஸ் நிறுவனம் எவர்சைட்ஸ் சதர்லேண்ட் (யுஎஸ்) LLP நிறுவனத்துடன் இணைந்துள்ளது மற்றும் அந்நிறுவனம் ஏப்ரல் 26 அன்று தனது வாடிக்கையாளரான ரிலையன்ஸ் சார்பில் ஒரு 'லாபிங் பதிவு' அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி பதிவுசெய்யப்பட்ட தேதி பிப்ரவரி 2, 2019 ஆகும்.

முதல் காலாண்டின் லாபியிங்

முதல் காலாண்டின் லாபியிங்

அதனைத் தொடர்ந்து மே 29, 2019 அன்று ரிலையன்ஸ் சார்பாக எவர்செட் சதர்லேண்ட் முதல் காலாண்டின் லாபியிங் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் மார்ச் 31, 2019 அன்று முடிவடைந்த மூன்று மாத காலத்திற்கு , லாபியிங் நடவடிக்கை மூலம் 140,000 டாலர் மொத்த வருவாயை பெற்றதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மாநிலத் துறை

அமெரிக்க மாநிலத் துறை

இந்த காலக்கட்டத்தில் "அமெரிக்க பொருளாதாரத் தடைகள் கொள்கைகள்" தொடர்பான குறிப்பாக லாபியிங் செய்ததாகவும், அதே நேரத்தில் அமெரிக்க மாநிலத் துறை இது தொடர்பாக தொடர்புகொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டாப்15 சட்டநிறுவனம்

டாப்15 சட்டநிறுவனம்

தனது வலைத்தளத்தில் எவர்செட்ஸ் சதர்லேண்ட் நிறுவனம் தன்னை ஒரு உலகளாவிய டாப்15 சட்டநிறுவனம் எனவும், உலகளாவிய அளவில் சிறு நடுத்தர நிறுவனம் முதல் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வரை பெரிய சவால்களை தீர்க்கவும் மற்றும் அவர்களின் வணிக இலக்குகளை அடைய உதவுவதாகவும் கூறியுள்ளது.

சரியான தூண்டுதல்

சரியான தூண்டுதல்

அரசாங்க துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் லாபியிங் என்பது அமெரிக்காவில் சட்டபூர்வமானது என்றாலும், அனைத்து பதிவு செய்யப்பட்ட லாபியிங் நிறுவனங்களும் அவற்றின் லாபியிங் நடவடிக்கைகளின் விவரங்களையும், அவற்றின் மூலம் பெறப்பட்ட கட்டணங்களைப் பற்றி ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிட வேண்டும்.

இந்த சிக்கலில் ரிலையன்ஸ் லாபியிங்-ல் ஈடுபடுவதற்கு சரியான தூண்டுதல் உடனடியாக நிச்சயமாய் இருக்க முடியாது. அமெரிக்கா சமீபத்தில் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கும் எந்த நாட்டிற்கும் தடையை விலக்கும் முடிவை இரத்து செய்தது.

பார்பர் கிரிஃபித் & ரோஜர்ஸ் எல்எல்சி

பார்பர் கிரிஃபித் & ரோஜர்ஸ் எல்எல்சி

அக்டோபர் 2018 இல், அமெரிக்கத் தடையை தொடர்ந்து ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மற்றும் அது நவம்பர் மாதம் மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெனிசுலா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறவில்லை என்று கூறிய ரிலையன்ஸ், அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்து ரஷ்யாவின் ரோஸ் நோன் போன்ற நிறுவனங்கள் மூலம் லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் கூறியது.

ஜனவரி 2009 இல், ரிலையன்ஸ் நிறுவனம் அதன் வணிக நடவடிக்கைகள் மற்றும் பிற காரணங்களுக்காக, அமெரிக்காவின் முன்னணி லாபியிங் நிறுவனமான, பார்பர் கிரிஃபித் & ரோஜர்ஸ் எல்எல்சி (BGR) நிறுவனம் மூலம் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட $ 2 மில்லியன் (ரூ 10 கோடி) செலவழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mukesh Ambani-led Reliance Industries resumes lobbying in US : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more