Home
News

அம்பானி கொடுத்த தீபாவளி கிஃப்ட் பாக்ஸ்.. Jio ஊழியர்களுக்கு உள்ளே காத்திருந்த ஷாக்.. என்ன இருந்தது?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு முகேஷ் அம்பானி (Mukesh Ambani) கொடுத்த தீபாவளி கிஃப்ட் பாக்ஸ் (Jio Diwali Gift Box) குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 2024 தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களுக்கு போனஸ் முதல் இனிப்புகள், நட்ஸ் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் வரையிலாக.. பல வகையான பரிசுகளை வழங்கின.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின், தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று பாக்கெட்டுகளை கொண்ட தீபாவளி கிஃப்ட் பாக்ஸ் (தீபாவளி பரிசு பெட்டி) ஒன்றை வழங்கி உள்ளார்.

அம்பானி கொடுத்த தீபாவளி கிஃப்ட் பாக்ஸ்.. Jio ஊழியர்களுக்கு ஷாக்!

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அவருக்கு கிடைத்த தீபாவளி கிஃப்ட் பாக்ஸை அன்பாக்ஸ் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆன அம்பானி தனது ஊழியர்களுக்கு "அப்படி என்ன பரிசு கொடுத்து இருக்கிறார்?" என்பதை அறிந்துகொள்ள பலரும் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர் .

இதன் விளைவாக அந்த வீடியோ வைரலாகி, தற்போது 1.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் அம்பானி கொடுத்த தீபாவளி கிஃப்ட் பாக்ஸில் - அவ்வளவு பெரிதாக ஒன்றும் இல்லை. வெளியான வீடியோ வழியாக, அம்பானி கொடுத்துள்ள வெள்ளை நிற தீபாவளி கிஃப்ட் பாக்ஸின் மேலே "தீபாவளி வாழ்த்துக்கள்" மற்றும் "சுப் தீபாவளி" என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது

அதற்கு உள்ளே ஒரு வாழ்த்து அட்டை உள்ளது. அதில் முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் குடும்பத்தின் நான்கு இளம் பேரக்குழந்தைகள் ஆகியோர்களின் தீபாவளி வாழ்த்து குறிப்பு உள்ளது.

அந்த வாழ்த்து அட்டையுடன் ஒரு பெரிய வெள்ளை நிற பையை பார்க்க முடிகிறது. அதற்குள் மூன்று பாக்கெட்கள் உள்ளன. ஒன்றில் - முந்திரி, இன்னொன்றில் - பாதாம் மற்றும் கடைசியாக - உலர் திராட்சைகள் உள்ளது. அம்பானியின் இந்த தீபாவளி கிஃப்ட் பாக்ஸ் ஆனது ஜியோ ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தாலும் கூட, நெட்டிசன்கள் அம்பானியையும், அவரது முந்திரி பாக்கெட்களையும் "வேற ஏதாவது நல்ல கிஃப்ட்-ஆ கொடுக்க கூடாதா?" என்று வறுத்தெடுத்து வருகின்றனர் .

ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு குறை வைத்திருந்தாலும் கூட, 2024 தீபாவளி ஆபர்களில் ஜியோ கஸ்டமர்களுக்கு எந்த குறையும் இல்லை என்றே கூறலாம். ஜியோ நிறுவனமானது இந்த தீபாவளிக்கு மொத்தம் 4 வகையான வெவ்வேறு ஆபர்களை அறிவித்துள்ளது. முதல் சலுகையாக ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு இலவச சந்தா அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது சலுகையாக ரூ.899 மற்றும் ரூ.3,599 ஆகிய 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதும் ரூ.3350 மதிப்புள்ள இலவச வவுச்சர்கள் / கூப்பன்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மை ஜியோஆப் வழியாக ரூ.3,350 மதிப்புள்ள கூப்பன் / வவுச்சர்கள் ரீடீம் செய்ய கிடைக்கும்.

மூன்றாவது சலுகையாக - ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகிய 2 ஜியோபார்த் 4ஜி ஃபீச்சர் போன்கள் மீது ரூ.300 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு அவைகள் ரூ .999 க்கு பதிலாக வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நான்காவது மற்றும் கடைசி சலுகையாக - ஜியோசாவன் சேவையின் கீழ் 3 மாத காலத்திற்கு ஜியோசாவன் ப்ரோ சந்தாவானது (JioSaavn Pro Individual Subscription) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. Photo Courtesy: itlu_me_suma Instagram page

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Jio Diwali Gift Box For Reliance Employees Video Went Viral What Inside that Box
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X