Home
News

சேட்டை தான் உங்களுக்கு.. அம்பானிக்கே இலவசம் தர முன்வந்த ட்வின் குட்டீஸ்.. ஒரே நாளில் உலக ஃபேமஸான குழைந்தைகள்..

உலக பணக்காரர் பட்டியலில் 9வது இடத்திலும், இந்திய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திலும் 119.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ராஜா போல வாழும் முகேஷ் அம்பானிக்கே (Mukesh Ambani) நாங்கள் 'இதை' இலவசமாக தர தயார் என்று 2 குட்டீஸ் பேசிய பேச்சு இப்போது உலகளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. யார் இந்த குட்டீஸ்? உலக பணக்காரர் பட்டியலில் இருக்கும் அம்பானி என்ற ஜாம்பவானுக்கு இந்த குட்டீஸ் என்ன இலவசத்தை வழங்க தயாராகியுள்ளனர்? எதற்காக இவர்களே இலவசம் பற்றி பேசி வாண்டட் ஆக முன்வந்துள்ளனர்? என்ற விபரத்தை பார்க்கலாம்.

என்ன தான்யா சமாச்சாரம்? அம்பானிக்கே இலவசமா? அவருக்கு என்ன தேவை இருக்க போகிறது? அதுவும் அவருக்கு தேவையான ஒன்று எப்படி இந்த குட்டீஸ் கைகளில் இருக்க வாய்ப்புள்ளது? இவர்களின் இலவசத்தை அம்பானி வாங்கிக்கொண்டாரா? இல்லையா? என்ற முழுமையான தகவலை இப்போது பார்க்கலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முகேஷ் அம்பானி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சேட்டை தான் உங்களுக்கு.. அம்பானிக்கே இலவசம் தர முன்வந்த குட்டீஸ்..

ரிலையன்ஸ் ஜியோ குழுமத்திற்கு சொந்தமான ஜியோ சினிமா (Jio Cinema) நிறுவனத்தின் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை முகேஷ் அம்பானி வாங்க திட்டமிட்டு, வால்ட் டிஸ்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. சில மாதங்களில், வால்ட் டிஸ்னியுடன் இந்திய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தியின் மூலம், முகேஷ் அம்பானி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தை வாங்கிவிட்டதாக கூறப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ சினிமா மற்றும் அவர் புதிதாக வாங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) என்ற புதிய ஒருங்கிணைந்த தளத்தை அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையானால், முகேஷ் அம்பானிக்கு JioHotstar.com என்ற டொமைன் கட்டாயமாக தேவைப்படும் என்பது உண்மையாகும். இதை முன்பே கணித்த, டெல்லியைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர், JioHotstar.com என்று குறிக்கும் டொமைனை ஏற்கெனவே தனக்கு சொந்தமாகிவிட்டார். வால்ட் டிஸ்னி நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தை வாங்குவதற்கு முன்பாகவே இந்த டொமைனை அந்த டெவலப்பர் வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானியின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் கையெழுத்தான சிறிய இடைவெளியில், அந்த டெவலப்பர் தனக்கு சொந்தமான JioHotstar.com டொமைனை ரூ.1 கோடி விலைக்கு விற்க தயாராக இருப்பதாக அறிவித்தார். இந்த தொகையை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது சொந்த மேற்படிப்பிற்காக தான் பயன்டுத்த விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானி டெவலப்பரின் ஆஃபரை கண்டுகொள்ளவே இல்லை.

அம்பானி வாங்காவிட்டால் என்ன? நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று துபாய்யை சேர்ந்த இரண்டு குட்டீஸ்கள், அந்த டெவலப்பரிடம் இருந்து JioHotstar.com என்ற டொமைனை வாங்கிவிட்டனர். ஜெய்னம், ஜீவிகா என்ற இரட்டையர்கள் தான் இந்த டொமைனை 1 கோடி கொடுத்து இப்போது வாங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் SevakArmy.com என்ற பெயரில் சமூக சேவை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முகேஷ் அம்பானிக்கு தேவைப்படும் JioHotstar.com என்ற டொமைன் தளத்தை இப்போது இந்த இரைட்டை குட்டீஸ் வாங்கி சொந்தமாகியுள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த டொமைனை இப்போது வாங்க விரும்பினால், அதை நாங்கள் இலவசமாக தர தயார் என்று இரண்டு குட்டீஸ்களும் சேர்ந்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். குட்டீஸ்களின் இந்த சுட்டித்தனமான சேட்டை இப்போது உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இதை அம்பானி வாங்கிக்கொள்வாரா? இல்லையா என்பது தான் இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani's Jio Disney Plus Hotstar Domain Is Under Control of Dubai Residence Twin Kids Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X