அம்பானி தந்த 100GB இலவச டேட்டா ஸ்டோரேஜ்.. புது Jio Brain, Jio AI கிளவுட் அறிமுகம்.. எப்போது கிடைக்கும்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தனது 47 வது ஆண்டு பொதுக் கூட்டத்தை (AGM) ஆகஸ்ட் 29, 2024 ஆம் தேதியான இன்று நடத்தியது. இதில் RIL குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்குதாரர்களைப் பாராட்டி, எரிசக்தி மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மைல்கல்களை பற்றி பகிர்ந்து கொண்டார். ரிலையன்ஸ் கீழ் இயங்கும் ஒட்டுமொத்த சேவைகளின் அணைத்து லாபம் மற்றும் வளர்ச்சி பற்றி பேசிய அவர், புதிய சேவைகள் குறித்த தகவலை அறிமுகப்படுத்தினார்.
ரிலையன்ஸின் டிஜிட்டல் பிரிவான Jio இப்போது உலகளாவிய மொபைல் ட்ராபிக்கில் 8 சதவீதத்தை நிர்வகித்து, உலக சராசரி விலையில் கால் பகுதி விலையில் டேட்டாவை வழங்குகிறது என்று அம்பானி கூறினார். Jio பயனர்கள் சராசரியாக மாதத்திற்கு 30GB டேட்டாவை பயன்படுத்துகிறார்கள், இது டேட்டா பயன்பாட்டில் 33 சதவீத உயர்வை குறிக்கிறது. இந்தியாவின் 5G மொபைல்களில் 85 சதவீதம் ஜியோவுடன் இணைந்துள்ளது என்று கூறினார்.

அம்பானி தந்த 100GB இலவச டேட்டா ஸ்டோரேஜ் யாருக்கு? எப்போது கிடைக்கும்?
ஜியோ பிரைன் (Jio Brain):
ஜியோ நிறுவனம் இப்போது சுமார் 13 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களுக்கு சேவை வழங்குகிறது என்று AGM Meet 2024 இல் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முகேஷ் அம்பானி இந்திய சந்தைக்கு ஏற்ற புதிய AI கருவியான ஜியோ பிரைன் (Jio Brain) சேவையை அறிமுகம் செய்தார். Jio Brain சேவை Jio பயனர்களுக்கு AI இன் பலன்களை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆஃபர் (Jio AI Cloud Welcome Offer):
அடுத்தபடியாக, முகேஷ் அம்பானி ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கும் ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆஃபர் (Jio AI Cloud Welcome Offer) பற்றிய திட்டங்களை அறிவித்தார். ஜியோ ஏஐ கிளவுட் மூலம் பயனர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கங்களை பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்துகொள்ள இந்த அம்சம் அனுமதிக்கிறது. இந்த சேவை இந்த ஆண்டு தீபாவளி முதல் பயன்படுத்த கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜியோ டிவி ஓஎஸ் மற்றும் ஜியோ டிவி பிளஸ் (JioTv OS and JioTv+):
முகேஷ் அம்பானியை தொடர்ந்து, அவரது மகன் அகாஷ் அம்பானி AGM நிகழ்வில் புதிய ஜியோ டிவி ஓஎஸ் (JioTv OS) சேவையை அறிமுகப்படுத்தினார். Jio செட் டாப் பாக்ஸுக்கான இந்த சொந்த இயக்க முறைமை அல்ட்ரா எச்டி 4K வீடியோ, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் JioTV+ சேவையையும் அவர் அறிமுகம் செய்தார். இது லைவ் டிவி, ஆன்-டிமாண்ட் நிகழ்ச்சிகள் மற்றும் பயன்பாடுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
ஜியோ போன்கால் ஏஐ (Jio Phonecall AI):
இது ஹை டெஃபினிஷனில் 860-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கு அணுகலை வழங்கி, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பிரபல பயன்பாடுகளையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. அடுத்த மிரட்டலான சேவையாக, ஜியோ போன்கால் ஏஐ (Jio Phonecall AI) சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இது Jio கிளவுட்டில் அழைப்புகளை பதிவு செய்து சேமிக்க அனுமதிக்கிறது. அதே நேரத்தில் உங்கள் வாய்ஸ் கால்களை நிகழ்நேரத்தில் தானாகவே டிரான்ஸ்கிரைப் செய்கிறது.
ஜியோ ஏஐ டாக்டர் (Jio AI Doctor):
அதாவது, உங்கள் வாய்ஸ் கால் அழைப்பு தகவல்களை எழுத்து வடிவில் மாற்றி டாக்குமென்ட்டாக தருகிறது. அதேபோல், லைவ் மொழிபெயர்ப்பு சேவையும் இது வழங்குகிறது. இது இந்தியாவின் 12 மொழிகளை ஆதரிக்கிறது. இத்துடன் ஜியோ ஏஐ டாக்டர் (Jio AI Doctor) சேவையையும் அம்பானி அறிமுகம் செய்து வைத்தார். கடந்த வருடம் முகேஷ் அம்பானி வெளியிட்ட, என்ட்ரி-லெவல் Jio Bharat 4G போன்கள் பற்றிய விபரங்களும் AGM கலந்தாய்வில் பேசப்பட்டது.
ஜியோ மொபைல் சேவை (Jio Mobile Services):
இந்த மலிவு விலை 4ஜி சாதனம் மூலம், இன்னும் மிஞ்சியுள்ள 2G பயனர்களை 4ஜி-க்கு மாறுவதற்கு உதவவுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல், JioAirFiber மூலம் 100 மில்லியன் வீட்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை சேர்க்கவும், 20 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை இலக்காகக் கொள்ளவும் அவர் திட்டங்களை வகுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








