Home
News

தம்பி.. ஆள் தெரியாம மோதிட்ட.. இந்தியர்களை மட்டம் தட்டிய ChatGPT சிஇஓ.. மரண அடி கொடுத்த அம்பானி!

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு, ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGPT) உருவாக்கத்திற்கு பின்னால் உள்ள முக்கிய நபருமான சாம் ஆல்ட்மேன் (Sam Altman), இந்தியர்களின் திறமையை பற்றி சற்றே மட்டமாக பேசி இருந்தார்.

இந்தியர்கள் சாட்ஜிபிடி ஏஐ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சி செய்யலாம், ஆனால் அது பயனற்றதாக இருக்கும் என்று சாம் ஆல்ட்மேன் கூறி இருந்தார். அதாவது இந்தியா தனக்கான சொந்தமான ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சிஸ்டமை உருவாக்கினாலும் கூட அதனால் எந்தவொரு பயனுள்ள முடிவையும் உருவாக்க இயலாது; அது சாட்ஜிபிடிக்கு ஈடாக இருக்காது என்பதே அவரின் கூற்றின் உள்ளர்த்தமாக இருந்தது.

இந்தியர்களை மட்டம் தட்டிய ChatGPT சிஇஓ.. மரண அடி கொடுத்த அம்பானி!

சாம் ஆல்ட்மேனின் இந்த கூற்றுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆன முகேஷ் அம்பானி தரமான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 4 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், ஜியோ நிறுவனமானது இந்திய பயனர்களுக்கு சாட்ஜிபிடி போன்ற புதிய ஏஐ சிஸ்டமை உருவாக்கும் என்று அறிவித்தார்.

முகேஷ் அம்பானியின் இந்த அதிரடி அறிவிப்பானது, சாட்ஜிபிடி உடன் ஒப்பிடக்கூடிய அளவிலான செயற்கை நுண்ணறிவு டூலை உருவாக்கும் திறன் இந்திய தொழில்நுட்பத் துறையிடம் இல்லை என்கிற சாம் ஆல்ட்மேனின் கூற்றுக்கு பதிலடி கொடுப்பது போலவும் உள்ளது. அதேசமயம் இதையொரு சவாலாக ஏற்றுக்கொள்வது போலவும் உள்ளது.

இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்த கொண்ட போது, சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியானது "நம்பிக்கையற்றது" என்றும், இந்த சாதனையை அடைவதில் இந்தியா கணிசமான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன் கூறி இருந்தார்.

இருப்பினும் இந்த விஷயத்தில், முகேஷ் அம்பானி மிகவும் வலுவான நம்பிக்கையுடன் இருப்பது போல் தெரிகிறது. ஏஐ-ல் சிறந்து விளங்குவதற்கு தேவையான வளங்களையும் அர்ப்பணிப்பையும் இந்தியா கொண்டுள்ளது என்று கம்பீரமாக பேசியுள்ளார். வெறும் வாய் வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளும் ஆள் - முகேஷ் அம்பானி அல்ல!

நினைவூட்டும் வண்ணம், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஜியோ நிறுவனமானது அனைவருக்கும், எல்லா இடங்களிலும் பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்து இருந்தது. சொன்னபடியே இன்று, எல்லா இடங்களிக்கும் ஜியோ சேவைகள் அணுக கிடைக்கிறது. அதே போன்ற ஒரு வாக்குறுதி தான் ஏஐ விஷயத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது!

இதுபற்றி மேலும் பேசுகையில், இந்தியாவை சார்ந்த ஏஐ மாடல்கள் மற்றும் ஏஐ- பவர்டு சொல்யூஷன்களை உருவாக்குவதற்கான முயற்சியை ஜியோ இயங்குதளங்கள் முன்னெடுத்து செல்ல விரும்புகிறது, இதன் மூலம் இந்திய குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஏஐ-யின் பலன்கள் எளிமையான வழியில் அணுக கிடைக்கும்.

மேலும் "இந்தியாவில் அளவுகோல் உள்ளது. இந்தியாவிடம் தரவு உள்ளது. இந்தியாவில் திறமை உள்ளது." என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஆக வரும் நாட்களில் ஜியோ 5ஜி-க்கு இணையான ஜியோ ஏஐ தொடர்பான பல தகவல்கள், முன்னெடுப்புகள் மற்றும் மேம்பாடுகள் வெளியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

46-வது ஆர்ஐஎல் ஏஜிஎம் நிகழ்வு தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகிய மூவரும் ஆயில்-டூ-ரீடெயில் வணிகக் குழுமத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

அதே ஏஜிஎம் நிகழ்வின் போது ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என்பதையும் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரை விட 20% மலிவான விலைக்கு வரவுள்ள இந்த புதிய சேவை முதற்கட்டமாக இது டெல்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Jio AI Could be Reply To OpenAI CEO ChatGPT Creator Sam Altman Comment on Indians
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X