உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.!

|

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்(Warren Buffett)அவர்களை பின்னுக்குதள்ளி பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி(Mukesh Ambani).வெளிவந்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் இப்போது 68.3பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

உள்ளிட்ட

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி வாரன் பபெட்டின் 67.9பில்லியன் டாலர்களை கடந்து இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானி அவர்கள் முன்னேறியுள்ளார். குறிப்பாக பேஸ்புக் இன்க் மற்றும் சில்வர் லேக் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்த அதன் டிஜிட்டல் யூனிட் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதால், மார்ச் மாதத்தில் குறைந்த அளவிலிருந்து அம்பானியின் இந்திய நிறுவனங்களின் பங்குகள் சுமார் இருமடங்காக அதிகரித்துள்ளன.

சில்லறை வணிகத்தில்

அன்மையில் பிபி பிஎல்சி (BP Plc)) நிறுவனம் ஆனது ரிலையன்ஸ் எரிபொருள் சில்லறை வணிகத்தில் சுமார் 1பில்லியன் டாலர் முதலீடு செய்ததால், அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.

கூகுள் பலூன்: இனி பலூன்கள் மூலம் இணைய சேவை- அட்டகாச திட்டம் தொடங்கிய Google!கூகுள் பலூன்: இனி பலூன்கள் மூலம் இணைய சேவை- அட்டகாச திட்டம் தொடங்கிய Google!

 இரண்டு நிறுவனங்களும்

குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஜியோ பிபி (Jio BP) என்கிற பெயரில், ஒரு ஜாயிண்ட் வெஜ்சர் கம்பெனியைத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் லண்டனைச் சேர்ந்த பிபி கம்பெனி 49சதவிகிதம் பங்குகளையும் இந்தியாவின் ரிலையன்ஸ் மீதமுள்ள 51சதவகித பங்குகளையும் வைத்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மதிப்பு உயர்ந்துவிட்ட

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துவிட்ட நிலையில், கடந்த மாதம் உலகின் முதல் 10பணக்காரர்களின் பிரத்தியேககிளப்பில் ஆசிய கண்டத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி மட்டுமே இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

னர் இந்த வாரம் வாரன் பபெட் சொத்து மதிப்பு குறைந்துள்ளதா

பின்பு 2.9பில்லியன் டார்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிய பின்னர் இந்த வாரம் வாரன் பபெட் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக
தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 63 வயதான முகேஷ் அம்பானி அவர்கள் இப்போது உலகின் எட்டாவது பணக்காரர் ஆவார். அவருக்கு
அடுத்த இடமான ஒன்பதாவது இடத்தில் வாரன் பபெட் உள்ளார்.

சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.! பயனர்கள் மகிழ்ச்சி.!சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.! பயனர்கள் மகிழ்ச்சி.!

முதலீடு செய்தது

பேஸ்புக், சில்வர்லேக், விஸ்டா, ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் கே.கே.ஆர், முபதலா, ஏடிஐஏ, டிபிஜி ஆகிய நிறுவனங்கள ஜியோவில் மொத்தமாக ரூ.1,15,693.95 கோடி முதலீடு செய்தது. அதேபோல் ரிலையன்ஸ் அதன் பொற்காலத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் நிறுவனம் அதன் லட்சிய பாதையில் தொடர்ந்து பயணித்து இலக்குகளை அடையும் எனவும் இந்தியாவின் வளர்ச்சி வளம்
ஆகியவைகளுக்கு தங்களின் பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம் எனவும் உறுதியளித்தார். தங்களது நிறுவனரான திருபாய் அம்பானியின் பார்வையை நிறைவேற்றித் தீர்வோம் என்று உறுதியளிக்க விரும்புவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

News Source: news18.com

Best Mobiles in India

English summary
Mukesh Ambani is 8th Richest Man in the World: : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X