அடேங்கப்பா.. முகேஷ் அம்பானி வீட்டின் சமையல்காரருக்கு இவ்வளவு சம்பளமா? இதோ முழு விவரம்..
ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். குறிப்பாக இவரது குடும்பத்தினர் விலை உயர்ந்த கார்கள், ஆடைகள், ஆபரணங்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் கண்டிப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் அம்பானியின் ஆடம்பர வீடான அன்டிலியாவின் சமையல்காரர் (cook) ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லத்தில் உள்ள சமையல்காரரின் மாதச் சம்பளம் ரூ.2 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக அவரின் ஆண்டு வருமானம் ரூ.24 லட்சம் ஆகும். குறிப்பாக இந்த சமையல்காரர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான கல்வி உதவி போன்ற பல்வேறு நன்மைகளும் அவருக்குக் கிடைக்கின்றன.
அதேசமயம் பருப்பு, ரொட்டி மற்றும் சாதம், சப்பாத்தி போன்ற எளிய உணவுகளைத் தான் முகேஷ் அம்பானி விரும்பி சாப்பிடுவாராம். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இட்லி-சாம்பாரை விரும்பி சாப்பிடுவதாக அம்பானி ஒருமுறை கூறியிருந்தார். இதுதவிர பப்டி சாட் மற்றும் சேவ் பூரி போன்ற தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகிறார் முகேஷ் அம்பானி.
மேலும் குஜராத்தி உணவுகளை ரசித்துச் சாப்பிடும் முகேஷ் அம்பானி மும்பையில் இருக்கும் ஸ்வாதி ஸ்நாக்ஸ் போன்ற மிகவும் பிரபலமான இடங்களில் அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பிஸியான கால அட்டவணையில் இருந்தபோதிலும் முகேஷ் அம்பானி எப்போதும் தனது குடும்பத்தினருடன் இரவு உணவருந்துவதற்கு நேரம் ஒதுக்குகிறார் என நீதா அம்பானி அளித்த பேட்டியில் ஒருமுறை கூறியிருந்தார்.
அன்டிலியா இல்லத்தில் இருக்கும் சமையல்காரர் மட்டும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவில்லை, அம்பானி வீட்டு ஓட்டுநர் கூட மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர அன்டிலியா இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் முகேஷ் அம்பானியின் அன்டிலியா (Antilia) உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். 4,00,000 சதுர அடி கொண்ட இந்த வீடு தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா வீடு 570 அடி உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களைக் கொண்டது. அம்பானியின் இல்லமானது ஆரோக்கிய ஸ்பா, சலூன், நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோஸ், ஹெலிபேடுகள், 100க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் இடம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
குறிப்பாக அம்பானிகளின் அன்டிலியா வீட்டில் சுமார் 600 பேர் பணிபுரிகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட ஜியோ டெலிகாம் நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image credit: AFP, dnaindia.com


Click it and Unblock the Notifications








