சத்தமில்லாமல் முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர தங்கும் விடுதி.! என்ன விலை தெரியுமா?

|

உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரானவர் முகேஷ் அம்பானி அவர்கள் பிரிட்டனின் முதலாவதும், மிகப் பிரபலமானதும், வரலாற்று பின்னணியும் கொண்ட, ஆடம்பர தங்கும் விடுதியான ஸ்டோக் பார்க்கை கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ளிவந்த தகவலின்

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரிசார்ட் தான் இந்த ஸ்டோக் பார்க். குறிப்பாக அழகான தோட்டங்கள், கோல்ப் மைதானம், 49 ஆடம்பர அறைகள், பூங்கா, உணவகம் என பல வசதிகளை கொண்டுள்ளது இந்த தங்கும் விடுதி.

அரச குடும்பத்திற்கு சொந்தமான, இன்டர்நேஷனல் குரூப்

அதாவது அரச குடும்பத்திற்கு சொந்தமான, இன்டர்நேஷனல் குரூப் நிறுவனத்திடமிருந்து இந்த சொத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

'மனித இனம் மிகவும் இழிவானது' என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!'மனித இனம் மிகவும் இழிவானது' என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!

பெரிய சொத்தை

குறிப்பாக இந்த மிகப் பெரிய சொத்தை வாங்குவது குறித்து பேரங்கள் நடைபெற்று வந்த நிலையில், 57 மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விடுதியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் டிரம்ப் அவர்களுக்கு இந்த டீல் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்பு இந்த விடுதியில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

த ஜனவரி 16-ம் தேதி முதல்

மேலும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்துள்ளன. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனமும் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழுந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும், இதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

ம் மே-1 ம் தேதி

வரும் மே-1 ம் தேதி முதல், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு சுரக்ஷா (R-Surakshaa) என பெயரிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்த கூட்டணி நமக்கு லாபம்தான்: ஜியோ, ஐடெல் இணைந்து உருவாக்கும் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்!இந்த கூட்டணி நமக்கு லாபம்தான்: ஜியோ, ஐடெல் இணைந்து உருவாக்கும் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்!

க ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்

குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீத்தா அம்பானி இருவரும் இணைந்து ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பின்பு எந்தவித தாமதமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகுதி வாய்ந்த உங்களது குடும்ப உறுப்பினர்களையும் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani has bought the iconic Stoke Park in the UK: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X