Home
News

அண்ணணிண் அசுர வளர்ச்சியும் தம்பியின் வீழ்ச்சியும்.! அம்பானி சகோதரர்களின் நாள் வருமானம் எவ்வளவு?

தற்போது தொடர்ந்து 11 வதுமுறையும் முகேஷ் திருப்பாய் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவரின் தம்பி அனில் திருப்பாய் அம்பானிக்கு இந்த ஆண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உலகில் முழுக்க உள்ள தலைசிறந்த கோடீஸ்வரர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது போர்ப்ஸ் பத்திரிகை.

தற்போது இந்திய அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் சொத்து மதிப்பையும் அவர்களின் நாள் வருமானத்தையும் இந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அண்ணணிண் அசுர வளர்ச்சியும் தம்பியின்  வீழ்ச்சியும்.! அம்பானி சகோதரர்கள

தற்போது தொடர்ந்து 11 வதுமுறையும் முகேஷ் திருப்பாய் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவரின் தம்பி அனில் திருப்பாய் அம்பானிக்கு இந்த ஆண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் அனில் டெலிகாம் துறையை கைவிட்டு சென்றதும் இவருக்கு பெரும் பின்னடைவாக கருத்தப்படுகின்றது. மேலும் நாள் வருமானத்திலும் முகேஷ் பாய் தான் முதலிடத்திலும் இருக்கின்றார். தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் அனில் பாயிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடம்:

இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடம்:

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் 100 கோட்டீஸ்வரர்களின் பட்டியிலில் சொத்து மதிப்பில், முகேஷ் அம்பானி முதலிடத்திலும் இருக்கின்றார்.

முகேஷ் அம்மபானி 11 வது முறையாக இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 47.3 பில்லியன் டாலர்களாக இருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ.3,48,934.47 கோடியாகும்.

முகேஷ்  அம்பானி ஒரு நாள் வருமானம்:

முகேஷ் அம்பானி ஒரு நாள் வருமானம்:

முகேஷ் அம்பானிக்கு போர்ப்ஸ் வெளியிட்டு செய்தியின் படி ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.187.9 கோடியாக வருமானத்தை பெற்று வருகின்றார்.

அனில் அம்பானி பின்னடைவு:

அனில் அம்பானி பின்னடைவு:

அனில் அம்பானிக்கு கடந்த முறை இந்திய கோட்டிஸ்வரர்களின் சொத்து பட்டியலில் 45ம் பிடித்து இருந்தார். தற்போது இந்த பத்திரிகை வெளியிட்டு தகவலின்படி 68ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது பெரிய பின்னடைவாக கருத்தப்படுகின்றது.


அனில் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 3.15 பில்லியன் டாலர்களாக இருந்தது. தற்போது 2.44 பில்லியன் டாலர்களாக சொத்து மதிப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நாள் ஒன்று சராசரியாக ரூ.14 கோடியை இழந்துள்ளார்.


முகேஷ் அம்பானியை காட்டிலும் தம்பி அனிலின் சொத்து தனித்துவமாக இருக்கின்றது. இதில், கட்டமைப்பு, மீடியா, பாதுகாப்பு, நிதிச்சேவை, டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதில் இஸ்ரேல், ரபேல், பிரான்ஸ் நாடுகளுடன் பாதுகாப்பு விமானம், ஆயுதம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்.

 ஜியோவின் எழுச்சியும், ரிலையன்ஸின் வீழ்ச்சியும் :

ஜியோவின் எழுச்சியும், ரிலையன்ஸின் வீழ்ச்சியும் :

கடந்த 2016ம் ஆண்டு டெலிகாம் துறையில் ஜியோ நிறுவனம் நுழைந்தது. இதனால் ஆர்காம் எனப்படும் அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஷ்டமடைந்தால், இந்த தொழில் இருந்து வெளியேறியது.

இதைத்தொடர்ந்து ஆர்காம் நிறுவனத்திடம் இருந்த ஆப்டிக்கல் பைபர் சொத்துக்களை ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ஜியோ நிறுவனம் வாங்கியது.

முகேஷின் வளர்ச்சியும் அனிலின் வீழ்ச்சியும்:

முகேஷின் வளர்ச்சியும் அனிலின் வீழ்ச்சியும்:

கடந்த 2006ம் ஆண்டு அம்பானியின் சொத்துக்கள் முகேஷ் மற்றும் அனில் ஆகியோரை வைகைப்படுத்தி பிரிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு எக்னாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டு செய்தியறிக்கையின் படி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 18.2 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் முகேஷ் அம்மபானிய் சொத்து மதிப்பு 20.1 பில்லியன் டாலராக இருந்தது.

தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 47.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அவரது தம்பி அனிலின் சொத்து மதிப்பு 18.2 பில்லியன் டாலர்களில் இருந்து 2.44 பில்லியன் டாலர்களாக குறைந்து விட்டது என்று இந்தாண்டு பேர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சொத்துக்களை விற்றார்:

சொத்துக்களை விற்றார்:

தொழில் நஷ்டம் காரணமாகவும் தனது சொத்துக்களை அனில் அம்பானி தனது தொழிலில் முக்கிய காரணியாக கருத்தப்பட்ட டெலிகாம் துறையை அண்ணன் முகேஷ் அம்பானிக்கு விற்றுவிட்டார். தற்போது அனிலை காட்டிலும் முகேஷ் அம்பானிக்கு சொத்து மதிப்பு 20 மடங்கு பெருகியுள்ளது குறிப்பிடதக்கது.

முகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.!

முகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.!

முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்;களில் ஒருவர், குறிப்பாக இவர் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.குறிப்பாக இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை அதிக நாட்கள் இந்நிறுவனம் மட்டுமே வழங்கியது. தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி அவர்கள் 44.3 பில்லியன் டாலருடன் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளார்,மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை 1,099.8 ரூபாயாக அதிகரித்துள்ளது, குறிப்பாக முன்பை விட 1.6%
அதிகரித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்1999 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜாம்நகர் பகுதியில் திறக்கப்பட்டது, முகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.

முகேஷ் அம்பானிக்கு இது ஒரு வெற்றியாக இருந்தது, அவர் இந்த சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கத்தை மேற்கொண்டபோது, ​​அது சவாலாக இருந்தது என்பதையும் உறுதி செய்தார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

கடந்த 22 மாத காலத்திற்குள், ரிலையன்ஸ் ஜியோ 215 மில்லியன் வாடிக்கையாளர்களை திரட்டியது. இந்த வியத்தகு சாதனையானது எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்தினாலும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைதொடர்பு வட்டராத்தில் இப்போது வரை ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கலிஃபோர்னியா

கலிஃபோர்னியா

முகேஷ் அம்பானி கலிஃபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார், அந்த சமயம் அவரது
அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் இந்தியாவிற்கு திரும்பினர். அம்பானி இங்கு வந்தபின்பு பாலியஸ்டர் ஃபில்மென்ட் யார்ட் (PFY) உற்பத்தி ஆலையை திறந்தார்.

முகேஷ் அம்பானி உலகின் மிக விலை உயர்ந்த வீடு

முகேஷ் அம்பானி உலகின் மிக விலை உயர்ந்த வீடு

மும்பையில் அம்பானி குடும்பத்தின் பெரிய வீடு 400,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது, இதன் மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடு ஆகும்.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமானம் ரூ.15 கோடி ஆகும். உடனே வாயை பிளக்க வேண்டாம். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5மூ பங்களிப்பு ஆட்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி அம்பானி நிறுவனத்தின்
மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!

ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!

உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தகாரமும் நம்ம அம்பானி தான். தெற்கு
மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிக் நேம்:

நிக் நேம்:

முகேஷ் அம்பானியின் என்னவென்றால் முகு என்று தான் அழைப்பார்களாம், மேலும் அவர் வாழ்க்கையில் மதுவை ருசித்ததில்லை.பின்பு சைவ உணவை அதிகம் விரும்புவார் அம்பானி, அதன்படி டால்-ரோட்டி மற்றும் பருப்பு, அரிசி
சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக்கொள்வார்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani earned Rs 187.9 crore per day : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X