குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்:பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?

|

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை கடனில்லா நிறுவனமாக மாற்றிவிட்டதாக முகேஷ் அம்பானி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

கடனில்லா நிறுவனமாக மாற்றிவிட்டது

கடனில்லா நிறுவனமாக மாற்றிவிட்டது

குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை கடனில்லா நிறுவனமாக மாற்றிவிட்டதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் யூனிட், டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் உலகின் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தது மற்றும் நிறுவனத்தின் மெகா பங்கு விற்பனை ஆகியவை தான் ரிலையன்ஸ் குழுமத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கடனில்லா நிறுவனமாக மாற்ற உதவியது என அவர் குறிப்பிட்டார்.

பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கிலிருந்து சுமார் 5.7 பில்லியன் டாலருக்கு மதிப்பிலான 9.9 சதவீத பங்கை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது, இந்திய மதிப்பின் படி இந்த ஒப்பந்தத்தின் விலை சரியாக 43,574 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்தது.

அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!

அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம்

அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ரூ.5,655.75 கோடிக்கு வாங்கியது. இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டது.

58 நாட்களில் ரூ.1,68,818 கோடி

58 நாட்களில் ரூ.1,68,818 கோடி

பேஸ்புக், சில்வர்லேக், விஸ்டா, ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் கே.கே.ஆர், முபதலா, ஏடிஐஏ, டிபிஜி ஆகிய நிறுவனங்கள ஜியோவில் மொத்தமாக ரூ.1,15,693.95 கோடி முதலீடு செய்தது. ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்து அதாவது 58 நாட்களில் ரூ.1,68,818 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், உரிமைகள் வெளியீட்டின் மூலம் ரூ.53,124.20 கோடியை பெற்றுள்ளது.

2021 மார்ச் 31 ஆம் தேதி இலக்கு

2021 மார்ச் 31 ஆம் தேதி இலக்கு

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ.1,61,035 கோடி கடன் சுமை இருந்தது. இதை 2021 மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்துக் கடனை தீர்ப்பதாக முகேஷ் அம்பான உறுதியளித்திருந்தார்.

கடன் சுமை தீர்க்கப்பட்டு விட்டது

கடன் சுமை தீர்க்கப்பட்டு விட்டது

இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கடன் சுமை தீர்க்கப்பட்டு விட்டதாகவும் பங்குதாரர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றியுள்ளோம் என்ற அறிவிப்பால் மகிழ்ச்சியடைவதாகவும் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

போருக்கு ரோபோக்களை களமிறக்க தயாராகும் சீனா: ஆயுத பலத்தை காண்பிக்கும் விதமான வீடியோ வெளியீடு!போருக்கு ரோபோக்களை களமிறக்க தயாராகும் சீனா: ஆயுத பலத்தை காண்பிக்கும் விதமான வீடியோ வெளியீடு!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொற்காலம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொற்காலம்

அதேபோல் ரிலையன்ஸ் அதன் பொற்காலத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் நிறுவனம் அதன் லட்சிய பாதையில் தொடர்ந்து பயணித்து இலக்குகளை அடையும் எனவும் இந்தியாவின் வளர்ச்சி வளம் ஆகியவைகளுக்கு தங்களின் பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம் எனவும் உறுதியளித்தார். தங்களது நிறுவனரான திருபாய் அம்பானியின் பார்வையை நிறைவேற்றித் தீர்வோம் என்று உறுதியளிக்க விரும்புவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Company Becomes Net-Debt Free Company

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X