Home
News

அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!

ஆசிய பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆசியாவின் பணக்காரர் பட்டியல்

ஆசியாவின் பணக்காரர் பட்டியல்

ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில் வாட்டர் நிறுவனம் இந்த வாரம் 20 சதவீதம் இழப்பை சந்தித்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார்.

ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பு

ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பு

ஜாக் மா-வை போல் ஜாங் ஷான்ஷன்-ம் சீன தொழிலதிபர் ஆவார். ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி குறைந்தது. காரணம் அவரது பாட்டில் வாட்டர் நிறுவனம் 20 சதவீதம் இந்த வாரம் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு 5 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக ஆனது.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 5 லட்சத்து 84 ஆயிரம் கோடியாக உள்ளது. இதையடுத்து முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

Lone Wolf என அழைக்கப்படும் ஜாங் ஷான்ஷன்

Lone Wolf என அழைக்கப்படும் ஜாங் ஷான்ஷன்

முகேஷ் அம்பானி குறித்து அனைவருக்கும் தெரியும். ஜாங் ஷான்ஷன் குறித்து தெரிவிக்கையில், ஜாங் ஷான்ஷன் ஒரு தனியார் பணக்காரராக கருதப்படுகிறார். இவர் அரசியல் மற்றும் கிளப்பி வணிகக் குழு அதாவது ஒரு குழு மற்றும் அமைப்பு சார்ந்த சக உறுப்பினர்களுடன் நட்பாக இருந்தாலும் வெளியாட்களுடன் தொடர்பில்லாமல் தனித்து நிற்கிறார். இதனால் இவர் Lone Wolf என்று அழைக்கப்படுகிறார்.

பெய்ஜிங் வாண்டாய் மருந்தியல் நிறுவனம்

ஜாங் ஷான்ஷன் சீனாவிற்கு வெளியே பெரிதளவு பிரபலமடையாதவர். ஜாங் ஷான்ஷன் பாட்டிலின் அடைக்கப்பட்ட தண்ணீர் தயாரிக்கும் நோங்ஃபு ஸ்பிரிங், பெய்ஜிங் வாண்டாய் மருந்தியல் நிறுவனம் என்ற இரண்டின் மூலம் வருவாயை அதிகரித்தவர்.

நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனம்

நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனம் மூலம் ஜாங் ஷான்ஷன் 2019 ஆம் ஆண்டில் 3.5 பில்லியன் டாலர் வருவாயை பதிவு செய்தார். அதேபோல் பெய்ஜிங் வாண்டாய் நிறுவனத்தின் மூலம் 171 மில்லியன் டாலர் வருவாயை ஷான்ஷன் பதிவு செய்தார்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Becomes the Asias Richest Person Again
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X