Home
News

Jio பயனர்களுக்கு காம்போ ரீசார்ஜ்.. அம்பானி குடும்பத்தின் ட்ரீட்.. OTT நன்மையுடன் 2 புது திட்டம்.. என்ன விலை?

முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆகாஷ் அம்பானி (Akash Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக (Telecom Industries) உள்ளது. இருப்பினும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திடீர் விலையேற்றத்திற்கு பிறகு, பல ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள், மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வரும் பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் தாவிவிட்டனர். இதனால், ஜியோ நிறுவனம் இப்போது பல புதிய சலுகைகளை அள்ளி வீசி வருகிறது. இப்போது 2 புதிய திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அந்த வரிசையில், தற்போது ஜியோ நிறுவனம் புதிதாக இலவச OTT நன்மைகளை வழங்கும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் விலை என்ன? இந்த புதிய திட்டங்கள் அள்ளி தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் விலை உயர்வை அறிவித்தது. இது ஜியோவின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களுக்கும் கூட அதிருப்தியை உருவாக்கியது.

Jio பயனர்களுக்கு காம்போ ரீசார்ஜ்.. அம்பானி குடும்பத்தின் ட்ரீட்..

Jio பயனர்களுக்கு காம்போ ரீசார்ஜ்.. அம்பானி குடும்பம் தந்த OTT பிளான் ட்ரீட்:

திடீர் விலை ஏற்றத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனம் வழங்கி வந்த நெட்ஃபிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) போன்ற OTT தளங்களுக்கான அணுகலை வழங்கும் பல திட்டங்களை நிறுத்தியது. இருப்பினும், இந்த இடைவெளியை நிரப்ப நிறுவனம் இப்போது இந்த திட்டங்களில் சிலவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. பிரபலமான OTT இயங்குதளங்களில் இருந்து ஸ்ட்ரீமிங்கை அனுமதிக்கும் சமீபத்திய திட்டங்களின்விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ என்ன தான் பல விலை பிரிவில் பல நன்மைகளை அடங்கிய திட்டங்களை வழங்கி வந்தாலும். சில ஜியோ வாடிக்கையாளர்களுக்கு OTT அணுகலுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களே அதிகம் தேவைப்படுகிறது. இவர்களுக்காகவே, நிறுவனம் மீண்டும் சில புதிய OTT நன்மைகளை வழங்கும் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கொண்டுவந்துள்ளது. ஜியோவின் அடிப்படை மற்றும் மிகவும் மலிவு விலையில் புதிய ரீசார்ஜ் திட்டமாக ரூ. 329 திட்டம் திகழ்கிறது.

ஜியோ ரூ. 329 திட்டம் (Jio Rs 329 Plan):
ஜியோவின் ரூ. 329 திட்டம் மலிவு விலை திட்டமாகும். இந்த திட்டம் தினமும் 1.5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்ளின்ட்டெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோசாவான் ப்ரோ (JioSaavn Pro) சேவைக்கான அணுகலையும் அடக்கி வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

ஜியோ ரூ. 949 திட்டம் (Jio Rs 949 Plan):
ஜியோவின் அடுத்த திட்டத்தின் விலை ரூ.949 விலையில் வருகிறது. இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக, இது இலவசமாக 90 நாள் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் (Disney+ Hotstar) வருகிறது. இந்த திட்டம் 84 நாள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது.

ஜியோ ரூ. 1,049 திட்டம் (Jio Rs 1049 Plan):
ஜியோ ரூ. 1,049 திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 84 தினங்களுக்கு செல்லுபடியாகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் Disney+ Hotstar நன்மைக்குப் பதிலாக, ஜியோ நிறுவனம் Sony LIV மற்றும் ZEE5 சந்தாவுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ பயனர்களுக்கு OTT சேவை தேவை என்றால், நீங்கள் இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை கருத்தில் கொள்ளலாம் மக்களே. இந்த திட்டங்களை பற்றிய உங்கள் கருத்தை எங்களுடன் கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani and Akash Ambani's Reliance Jio Announces Cheapest Plans With OTT benefits In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X