சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை வழங்கும் எம்டிஎஸ்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மொபைல் பிராடுபேண்டு சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடத்துகிறது எம்டிஎஸ் நிறுவனம்.
மொபைல் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பிராடுபேண்டு சேவை மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் மொபைல் பிராடுபேண்டு சேவையை, கர்நாடகா மாநிலத்தில் உள்ள 60 நகரங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்க உள்ளது எம்டிஎஸ் நிறுவனம்.
இந்தியா முழுவதுமாக 400 நகரங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 60 நகரங்களிலும் எம்பிலேஸ் மொபைல் பிராடுபேண்டு சேவையை விரிவுபடுத்துகிறது எம்டிஎஸ் நிறுவனம். இதனால் மொபைல் வாடிக்கையாளர்கள் எம்பிலேஸின் மொபைல் பிராடுபேண்டு சேவையனை பெற முடியும்.
மூடபிதரே, தபஸ்பேட், குஷல்நகர், மால்கெட் உள்ளிட்ட இடங்களில் எம்டிஎஸ் நிறுவனம் எம்பிலேஸ் மொபைல் பிராண்டு சேவையை விரிவுபடுத்துகிறது.
சுதத்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சேவைகளில் நிறைய சலுகைகளையும் பெற முடியும். இதன் மூலம் அதி வேகத்தில் இயங்கும் ஹை ஸ்பீட் டேட்டா நெட்வொர்க் வசதியினை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இது மட்டும் அல்லாமல் ரீசார்ஜ் வவுச்சரில் சிறப்பு சலுகைகளையும் அறிமுகம் செய்கிறது எம்டிஎஸ். அதாவது ரூ. 68க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ. 75க்கு உண்டான டாக் டைம் வசதியினை பெறலாம் என்கிறது இந்த சிறப்பு சலுகைகள். அது மட்டுமல்லாமல் 68 ஃப்ரீ எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.


Click it and Unblock the Notifications