வெப்சைட்டை ஹாக் செய்த பாக்கிஸ்தானி ஹாக்கர்!!!

Written By:

எம்டிஎன்எல்(MTNL) வெப்சைட்டை பாக்கிஸ்தானி ஹாக்கர் ஒருவர் ஹாக் செய்துவிட்டார். இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த வெப்சைட்டை ஹாக் செய்துள்ளார்.

எம்டிஎன்எல்(MTNL) வெப்சைட்டை பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் இந்த வெப்சைட்டை பயன்படுத்த முடியவில்லை என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். ஹாக் செய்த ஹோம் பேஜ்ஜின் பக்கத்தை ரீபிரஷ் செய்யவிட்டால் அது பழைய வெப் பேஜ்ஜூகளுக்கு சென்று விடுகிறதாம்.

ஹாக் செய்யப்பட்ட ஹோம் பேஜ்ஜில் பாக்கிஸ்தான் சுதந்திர தினத்திற்க்கு("MrCreepy Was Here. Napsters CrEw. Happy Independence Day Pakistan.)வாழ்த்து சொல்லும் செய்தி இருந்தது.

வெப்சைட்டை ஹாக் செய்த பாக்கிஸ்தானி ஹாக்கர்!!!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் பாக்கிஸ்தானை சேர்ந்த மற்ற ஹாக்கர்களான பீரீக், எம்கான் ஸ்வாடி மற்றும் எல்லா பாக்கிஸ்தானி ஹாக்கர்களுக்கும்(http://Facebook.Com/m3creepy. Greets: SEEKER, Dr.FREAK, MKHAN SWATI, And All Pakistani Hackers :D".) வாழ்த்து சொல்லும் செய்தி இருந்தது.

டெலிகாம் சேவையை அளிக்கும் இதன் கார்ப்ரேட் வெப்சைட் டெல்லியில் 80 லட்சம் பயனீட்டாளர்களை கொண்டுள்ளது. நல்ல வேலையாக இவைகளுக்கு ஹாக்கர் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

புனேவின் டிராபிக் போலீஸ் வெப்சைட்டையும் ஹாக் செய்து விட்டதாக இந்த பாக்கிஸ்தானி ஹாக்கர் பேஸ்புக்கில் போஸ்ட் செய்திருந்தார். ஆனால் அந்த வெப்சைட் நார்மலாக தான் இயங்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot