மும்பை வாடிக்கையாளர்களுக்கு எம்டிஎன்எல் வழங்கும் புதிய ப்ராட்பேண்ட் அன்லிமிட்டட் திட்டங்கள்

By Karthikeyan
|
மும்பை வாடிக்கையாளர்களுக்கு எம்டிஎன்எல் வழங்கும் புதிய ப்ராட்பேண்ட் அன்லிமிட்டட் திட்டங்கள்

மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடட் என்று அழைக்கப்படும் எம்டிஎன்எல் நிறுவனம் மும்பையைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டட் ப்ராட்பேண்ட் திட்டங்களை அறிவித்திருக்கிறது. இந்த புதிய திட்டத்தின் படி நடுஇரவு 12 முதல் காலை 8 மணி வரை 2எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்காக தனிக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

இந்த புதிய திட்டங்களுக்கு டிஎஸ்எல் அன்லிமிட்டட் 450, டிஎஸ்எல் அன்லிமிட்டட் 999, டிஎஸ்எல் அன்லிமிட்டட் 1599, டிஎஸ்எல் அன்லிமிட்டட் 550 கோம்போ மற்றும் டிஎஸ்என்எல் 995 கோம்போ ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த புதிய திட்டங்கள் நேற்றும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் ஜனவரி 5 வரை செயல்பாட்டில் இருக்கும்.

எம்டிஎன்எல்லின் டிஎஸ்எல் அன்லிமிட்டட் 450 ப்ராட்பேன்ட் திட்டத்தின்பட காலை 8 முதல் மாலை 6 மணி வரை 512 கேபிஎஸ் வேகத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதுபோல் மாலை 6 முதல் நடுஇரவு 12 வரை 1எம்பிபிஎஸ் வேகத்திலும் நடுஇரவு 12 முதல் காலை 8 வரை 2எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.450 அல்லது வருடத்திற்கு ரூ.4,950 மட்டும் செலுத்தினால் மட்டும் போதுமானது.

டிஎஸ்எல் அன்லிமிட்டட் 999 ப்ராட்பேண்ட் திட்டத்தில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை 1.13எம்பிபிஎஸ் வேகத்திலும், மாலை 6 முதல் நடு இரவு 12 வரை 1.344 எம்பிபிஎஸ் வேகத்திலும் நடு இரவு 12 முதல் காலை 8 மணி வரை 2எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்காக மாத கட்டணமாக ரூ.999ம் அல்லது வருட கட்டணமாக ரூ.10,999ம் செலுத்த வேண்டும்.

டிஎஸ்எல் அன்லிமிட்டட் 1599 ப்ராட்பேன்ட் திட்டத்தில் காலை 8 முதல் மாலை 6 வரை 1.344 எம்பிபிஎஸ் வேகத்திலும், மாலை 6 முதல் நடு இரவு 12 வரை 2எம்பிபிஎஸ் 1.792 எம்பிபிஎஸ் வேகத்திலும், நடு இரவு 12 முதல் காலை 8 வரை 2எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு மாத கட்டணம் ரூ.1599 அல்லது வருட கட்டணமாக ரூ.17,589 செலுத்த வேண்டும்.

அதுபோல் டிஎஸ்எல் அன்லிமிட்டட் 550 கோம்போ திட்டத்தின் படி காலை 8 முதல் மாலை 6 வரை 512கேபிஎஸ் வேகத்திலும், மைலை 6 முதல் நடு இரவு 12 வரை 1எம்பிபிஎஸ் வேகத்திலும் மற்றும் நடு இரவு 12 முதல் காலை 8 வரை 2எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக மாத கட்டணம் ரூ.550 செலுத்த வேண்டும்.

இறுதியாக டிஎஸ்எல் அன்லிமிட்டட் 995 கோம்போ திட்டத்தின்படி காலை 8 முதல் மாலை 6 வரை 1எம்பிபிஎஸ் வேகத்திலும், மாலை 6 முதல் நடு இரவு 12 வரை 1எம்பிபிஎஸ் வேகத்திலும் நடு இரவு 12 முதல் காலை 8 வரை 8எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக ரூ.995 செலுத்த வேண்டும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X