வெறித்தனமாக நோக்கியா போன்களை சேகரிக்கும் "மிஸ்டர் நோக்கியா".!

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் உள்ள ஜெயேஷ் காலே என்பவர் தனது வீடு முழுதும், நோக்கியா போன்களை குவித்து வைத்துள்ளார். இவரை அனைவரும் மிஸ்டர் நோக்கியா என்று அழைத்து வருகின்றனர்.

|

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் உள்ள ஜெயேஷ் காலே என்பவர் தனது வீடு முழுதும், நோக்கியா போன்களை குவித்து வைத்துள்ளார்.

இவரை அனைவரும் மிஸ்டர் நோக்கியா என்று அழைத்து வருகின்றனர்.

1200 வெவ்வேறு நோக்கியா மாடல் போன்கள்

1200 வெவ்வேறு நோக்கியா மாடல் போன்கள்

நோக்கியா போன்கள் மீது கொண்ட காதலினால் இவர் நோக்கியா போன்களை சேகரிக்கத் துவங்கியுள்ளார். இதுவரை இவரிடம் சுமார் 1200 வெவ்வேறு நோக்கியா மாடல் போன்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நோக்கியா போன் கலெக்டர்

நோக்கியா போன் கலெக்டர்

இவரின் வீட்டில் படுக்கை அரை, சமையல் அரை, அலமாரி, மேஜை, டிராயர், சோஃபா மற்றும் கார் போன்ற அனைத்து இடங்களிலும் அவர் சேகரித்து வைத்த நோக்கியா போன்களை குவித்து வைத்துள்ளார்.

கீழே விழுந்து உடைந்த நோக்கியா போன் தான் காரணம்

கீழே விழுந்து உடைந்த நோக்கியா போன் தான் காரணம்

தான் கல்லூரி படித்து வந்த நாட்களில் தன்னிடம் இருந்த நோக்கியா போன் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உடைந்துள்ளது. உடைந்த நோக்கிய போன்களை ஒட்ட வைத்து ஆன் செய்ததும் நன்றாக வேலை செய்துள்ளது.

நோக்கியா மீது அதீத காதல்

நோக்கியா மீது அதீத காதல்

அதற்குப் பின்பு தான் நோக்கியா போன்களின் மீது அதீத காதல் உண்டாகியுள்ளது. அதற்குப் பின் தேடித் தேடி நோக்கியா போன்களை சேகரிக்கத் துவங்கியுள்ளார். இதற்கு இவரின் குடும்பத்தினர் மற்றும் மனைவியும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.

40 லட்சம் மதிப்பு

40 லட்சம் மதிப்பு

இதுவரை 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவு செய்து மொபைல்களை சேகரித்துள்ளார். தற்பொழுது அவரிடம் உள்ள நோக்கியா போன்களின் மதிப்பு சுமார் 40 லட்சம் இருக்கும் என்று தேறிவிக்கப்பட்டுள்ளது.

லிம்க்கா சாதனையாளர் விருது

லிம்க்கா சாதனையாளர் விருது

அதிகப்படியான நோக்கியா போன்களை இந்தியாவில் சேகரித்ததுக்காக லிம்க்கா சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டிற்கும் முயற்சி செய்ய போவதாக ஜெயேஷ் காலே தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Mr Nokia The Phone Fanatic : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X