Motorola-வின் அடுத்த போன் குறித்த அப்டேட்; ஷாக் ஆகிப்போன Samsung! அப்படி என்ன மேட்டர்?

|

ஒரு ஸ்மார்ட்போனில் எத்தனை புதுமையான அம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் புகுத்தினாலும் கூட "பத்தல..பத்தல.." என்று கூறுபவர்கள் - எக்காலத்திலும் - இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படியான ஒரு வளர்ச்சி பாதையை நோக்கிய நெருக்கடியில் உருவானது தான் - ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (Foldable smartphone), அதாவது மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்!

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவை ஆட்சி செய்யும் சாம்சங்!

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவை ஆட்சி செய்யும் சாம்சங்!

இந்த பிரிவின் கீழ், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் "கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும்" ஒரு நிறுவனம் என்றால் அது சாம்சங் தான். இந்நிறுவனம் ஃபிளிப் மற்றும் ஃபோல்ட் வகைகளின் கீழ் சில மிகவும் 'காஸ்ட்லி' ஆன மாடல்களை தன்வசம் கொண்டுள்ளது.

இந்த பிரிவில் சாம்சங் நிறுவனத்திற்கு சமமான ஒரு போட்டியாளராக மோட்டோரோலா நிறுவனம் பார்க்கப்படும் நிலைப்பாட்டில், மோட்டோரோலா நிறுவனத்தின் ஒரு லேட்டஸ்ட் நடவடிக்கை சாம்சங்கிற்கே சற்று பீதியை கிளப்பும்படி உள்ளது.

மோட்டோரோலா அப்படி என்ன செய்தது?

மோட்டோரோலா அப்படி என்ன செய்தது?

மோட்டோரோலா நிறுவனம், மோட்டோரோலா ரேஸர் 3 (Motorola Razr 3) என்று அழைக்கப்படும் அதன் 'நெக்ஸ்ட் ஜெனரேஷன்' ஃபோல்டபில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்காங்கே வெளியான சில லீக்ஸ் தகவல்களும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்கின்றன. இருப்பினும், மோட்டோரோலா நிறுவனம் இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் தான் வரவிருக்கும் மோட்டோரோலா ரேஸர் 3 ஸ்மார்ட்போனின் விலை குறித்த ஒரு லீக்ஸ் தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் ஃபோல்டபிள் மாடல்களுக்கு ரேஸர் 3 கடும் போட்டியை வழங்குமா?

சாம்சங் ஃபோல்டபிள் மாடல்களுக்கு ரேஸர் 3 கடும் போட்டியை வழங்குமா?

வழங்கும் என்றே கூறலாம். ஜிஎஸ்எம்அரேனா (GSMarena) வழியாக கிடைத்த தகவலின்படி, ஐரோப்பியாவில் மோட்டோரோலா ரேஸர் 3 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ.94,360 இருக்கலாம். இப்படியான ஒரு விலை நிர்ணயம் சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டிகளை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம், ரேஸர் ஸ்மார்ட்போனின் முந்தைய இரண்டு மாடல்களும் கடந்த 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவிற்கு அவைகள் மிகப்பெரிய விலை நிர்ணயத்துடன் வந்தன. ரேஸர் ஃபோல்டபிள் ஆனது கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சத்திற்கும், அதே சமயம் சில பெரிய அப்டேட்களுடன் ரேஸர் ஃபோல்டபிள் 5ஜி ஆனது கிட்டத்தட்ட ரூ. 1.3 லட்சத்திற்கும் அறிமுகமானது.

இதற்கு மாறாக சாம்சங் நிறுவனம், கேலக்ஸி இசட் ஃபிளிப் மாடலை ரூ.1 லட்சம் என்கிற புள்ளிக்குள்ளும் மற்றும் ஃப்ளிப் 3 மாடலை ரூ.1 லட்சத்திற்க்குள் என்கிற புள்ளியிலும் விலை நிர்ணயம் செய்தது.

5G சேவைகள் 5G சேவைகள் "இல்லாத" இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியது அவசியமா?

இதெல்லாம் சரி, இந்தியாவிற்கு ரேஸர் 3 வருமா?

இதெல்லாம் சரி, இந்தியாவிற்கு ரேஸர் 3 வருமா?

நல்ல கேள்வி! ஆனால் பதில் இல்லை. மோட்டோரோலாவின் ரேஸர் 3 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா? என்கிற கேள்விக்கு எந்த விடைகளும் இல்லை. வந்தால் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

மோட்டோரோலா ரேஸர் 3 ஆனது சிங்கிள் பிளாக் கலரில் மட்டுமே அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 ஆனது பல வகையான கலர் ஆப்ஷன்களில் வரலாம் என்கிற வதந்திகள் உலவுவதையும் குறிப்பிட விரும்பிகிறோம்.

கலரா முக்கியம்; கன்டென்ட் தானே முக்கியம்?

கலரா முக்கியம்; கன்டென்ட் தானே முக்கியம்?

கலரில் என்ன இருக்கிறது? அம்சங்களை வைத்து தானே எது பெஸ்ட் என்கிற தீர்மானத்திற்கு வர முடியும்! அப்படியாக - இதுவரை கிடைத்த லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில் - ரேஸர் 3 ஆனது நாட்ச் மற்றும் 'பல்க்' ஆன கன்னப்பகுதி எதுவும் இல்லாமல் பெரிய 6.7-இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

இந்த டிஸ்ப்ளே தற்போது வாங்க கிடைக்கும் சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றது.

எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவை பொறுத்தவரை, அதுவும் ஒரு பெரிய 3-இன்ச் டிஸ்ப்ளேவை பெறுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், முன்னெப்போதையும் விட வரவிருக்கும் ரேஸர் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

டிஸ்பிளேவை தவிர்த்து வேறு எதுவும்

டிஸ்பிளேவை தவிர்த்து வேறு எதுவும் "பெரிதாக" இல்லையா?

ஒரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே மட்டுமே பிரதான விடயம் அல்ல. சிப்செட்டும் முக்கியமே. அப்படியாக, மோட்டோரோலா ரேஸர் 3 ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்-ஐ பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், இப்போது வாங்க கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான மிகவும் சக்திவாய்ந்த, செயல்திறன்மிக்க சிப் இதுவாகும்.

இதனுடன் ரேஸர் 3 மாடலானது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைக்கு மோட்டோரோலா ரேஸர் 3 குறித்த விவரங்கள் இவ்வளவு தான். மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Motorola working on its next-generation foldable smartphone could be moto razr 3. The leaked price may shock you. Check expected specifications also.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X