Home
News

ஆபிஸ் போற எல்லாருமே போட்டிபோட்டு இந்த ThinkPhone-அ வாங்க போறாங்க.! ஏன் தெரியுமா?

லெனோவாவிற்கு (Lenovo) சொந்தமான மோட்டரோலா (Motorola) நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் புதிதாக மோட்டோரோலா திங்க் போன் (Motorola ThinkPhone) என்ற புதிய சீரிஸ் ஸ்மார்ட்போனை (smartphone) அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. தெரியாதவர்களுக்கு, லெனோவா நிறுவனம் திங்க்பேட் (ThinkPad Laptop) சீரியஸ் என்ற லேப்டாப் வரிசையைக் கொண்டுள்ளது.

சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள லெனோவா லேப்டாப்களுடன் நன்றாக வேலை செய்யும் சில உற்பத்தித் திறனை மையமாகக் கொண்டு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை இந்த திங்க்போன் (ThinkPhone) வழங்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய போன் பற்றிய முக்கிய விபரங்களைத் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் வாருங்கள் பார்க்கலாம்.

ஆபிஸ் போற எல்லாருமே போட்டிபோட்டு இந்த ThinkPhone-அ வாங்க போறாங்க.!

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ThinkPhone பற்றிய சில முக்கியமான தகவலை வெளிப்படுத்தியது டிப்ஸ்டர் சுனூப்பி டெக் என்ற சேனலாகும். வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய குறிப்புகளின் விபரங்களை இந்த டிப்ஸ்டர் தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இந்த திங்க் போன் தட்டையான பிரேம் வடிவமைப்பைக் கொண்டு இருக்கிறது.

இடது பக்கத்தில் ஒரு சிவப்பு பட்டனை கொண்டுள்ளது. இந்த சிவப்பு பட்டன் என்ன வேலையைச் செய்யும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதைப் பார்ப்பதற்கு ஒன்பிளஸ் (OnePlus) போன்களில் வரும் அலர்ட் ஸ்லைடர் பட்டன்களை போல் காட்சியளிக்கிறது. இந்தத் திங்க்போன், லெனோவா நிறுவனத்திற்குச் சொந்தமான ThinkPad லேப்டாப்களுடன் இணக்கம் ஆகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த போன் கனெக்ட் டிஸ்ப்ளே, மிரர் போன், வெப்கேம் போன்ற விருப்பங்களை லேப்டாப் உடன் எளிதாக இணைக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், தின்க்பேட்டில் உங்களுக்கு வரும் மெசேஜ்களை பார்ப்பதற்கும் கூடுதல் சேவைகளை போன் மூலம் சில நொடியில் அணுகுவதற்கு இந்த போன் பல அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆபீஸ் வேலைகளை போனில் அணுக இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கிறது.

ஆபிஸ் போற எல்லாருமே போட்டிபோட்டு இந்த ThinkPhone-அ வாங்க போறாங்க.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கடுமையான பேனலுடன் திங்க்போன் (ThinkPhone) என்ற லோகோவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50 எம்பி ப்ரைமரி கேமராவையும் கூடுதலாக இரண்டு அல்ட்ராவை கேமரா சென்சார் மற்றும் மேக்ரோ ஷுட்டர் சென்சர்களைக் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. இதில் 13 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

டிப்ஸ்டர் இன் தகவல் படி இந்த திங் போன் சாதனம் குவால்காம் ஸ்னாப் டிராகன் 8+ ஜென் 1 சிப்சட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 68W சார்ஜிங் உடன் 15W வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தையும் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5000mah கொண்ட பேட்டரி ஆக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இது 6.6' இன்ச் கொண்ட OLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மறுபடியும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலாக 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்ட இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி 2023 நிகழ உள்ள CES நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola ThinkPhone Launch and Specification Details Tipped Online Can Sync With Lenovo ThinkPad Laptop
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X