2 டிஸ்பிளேவுடன் வெளிவரும் Motorola Razr+ போன்.! OnePlus, Samsung, Google-லாம் ஓட போகுது!
சாம்சங், ஒப்போ, ஒன்பிளஸ், கூகுள், டெக்னோ போன்ற நிறுவனங்களை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனம் இப்போது அதன் அடுத்த போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிடத் தயாராக உள்ளது. Motorola Razr சீரிஸை கடந்த ஆண்டு நிறுவனம் Motorola Razr 2022 அறிமுகத்துடன் புதுப்பித்தது.
இப்போது Lenovo நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் Motorola Razr+ என்ற புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் உடன் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய செகண்டரி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது என்பதையும் சமிபதியாக லீக் தகவல் வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இது ஒரு பெரிய பேட்டரியுடன் வரலாம்.

இந்த சாதனம் மோட்டோரோலா ரேஸ்ர்+ என அழைக்கப்படும் மற்றும் XT2321 மாதிரி எண்ணைக் கொண்டிருக்கும் என்பதை சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது. வரவிருக்கும் Motorola Razr+ இன் படம் இணையத்தில் வெளிவந்துள்ளது. புதிய சாதனம் 2.7 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் 2,850mAh பேட்டரியுடன் வரலாம் என்று சமீபத்திய கசிவு தெரிவிக்கிறது.
இருப்பினும், இந்த சாதனத்தின் மிக சமீபத்திய படம், இது இரட்டை வண்ண பின்புற பேனல் மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. மோட்டோரோலா Razr பிராண்ட் பெயரைக் காட்டிலும் புதிய போனுக்கு Razr+ மோனிகரைப் பயன்படுத்தக்கூடும் என்று வதந்திகள் உள்ளன.
போன் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்களை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும், சில தொழில்நுட்ப வல்லுநர்கள் புதிய சாதனம் அதன் முன்னோடியிலிருந்து மேம்படுத்தப்படும் என்று நம்புகின்றனர். Motorola கடந்த ஆண்டு சீனாவில் Moto Razr 2022 மாடலை வெளியிட்டது. இது 6.7 இன்ச் போல்டபில் OLED டிஸ்ப்ளே மற்றும் 2.7 இன்ச் சிறிய வெளிப்புற OLED கவர் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டிருந்தது.
இந்த போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. Moto Razr 2022 ஆனது 32 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Motorolaவின் CEO Yuanqing Yang பிப்ரவரியில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 இன் போது Razr போல்டபில் ஸ்மார்ட்போன்களின் புதிய பதிப்பை "மிக விரைவில்" வெளியிடத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஜூன் மாதத்தில் Razr+ கிடைக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Motorola Razr+ இன் வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இம்முறை Razr Plus ஆனது Samsung மட்டுமின்றி Oppo உள்ளிட்ட பிற பிராண்டுகளிடமிருந்தும் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும். OnePlus கூட அதன் போல்டபில் ஸ்மார்ட்போனின் முன்மாதிரியை டீஸ் செய்துள்ளது. பின்னர் கூகிள் போல்டபில் பிக்சல் போன் கூட விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








