Home
News

Amazon-ஐ ஓவர்டேக் செய்த அம்பானி.. மாஸான போன் வாங்கினா இயர்பட்ஸ் FREE.. ரூ.50000 முழுசா தள்ளுபடி.. எந்த மாடல்?

அம்பானியா கொக்கா? என்பது போல, அமேசான் (Amazon) வழங்கும் சலுகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையிலான ஒரு புதிய ஸ்மார்ட்போன் சலுகையை முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambai) சொந்தமான ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) நிறுவனம் இப்போது வழங்கியுள்ளது. ரூ. 50,000 முழுசா ஒரு போனின் மீது தாராள தள்ளுபடி காண்பித்தது மட்டுமின்றி, இந்த போனை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக TWS இயர்பட்ஸ் சாதனத்தையும் இலவசமாக (Free) வழங்கி திகைப்படைய செய்துள்ளது ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம். இது எந்த மாடல்? இதை எப்படி சலுகை விலையில் வாங்குவதென்ற விபரம் இதோ.

இந்தியாவை பொறுத்தவரையில், பெரும்பாலான பொதுமக்கள் அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிளிப்கார்ட் இந்தியா (Flipkart India) தளம் வழியாக மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் (online shopping) செய்து வருகிறார்கள். குறிப்பாக, ஸ்மார்ட்போன் (smartphone), மொபைல் (mobile), ஸ்மார்ட்வாட்ச் (smartwatch), ஸ்மார்ட் டிவி (smart TV) போன்ற சாதனங்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த இரண்டு தளங்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

Amazon-ஐ ஓவர்டேக் செய்த அம்பானி.. மாஸான போன் வாங்கினா இயர்பட்ஸ் FREE..

Amazon-ஐ ஓவர்டேக் செய்த அம்பானி.. மாஸான Motorola Razr 50 Ultra போன் வாங்கினா இயர்பட்ஸ் FREE:

ஆனால், இவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில், சமீப காலமாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance digital site) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது நம்ப முடியாத சலுகையை வழங்கி மக்களை ஈர்க்கும் புதிய இ-காமர்ஸ் தளமாக ரிலையன்ஸ் டிஜிட்டல் தளம் உருமாறியுள்ளது. இந்த தளத்தில் தற்போது ஒரு ஸ்மார்ட்போன் மீது முழுமையாக ரூ. 50,000 விலை தள்ளுபடி (Rs.50,000 discount on smartphone) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், ரூ.50,000 தள்ளுபடி வழங்கியது (Motororla mobile gets Rs 50000 Offer) மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இயர்பட்ஸ் (Free earbuds with mobile phone) சாதனத்தையும் நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் சலுகையானது மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra):

இந்த மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) சாதனத்தின் அசல் விலை (MRP) ரூ. 1,19,999 ஆகும். ஆனால், தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையில் மூலம் இதன் விலை மீது 42% நேரடி விலை தள்ளுபடி (discount) செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 50,000 முளுமையாக குறைந்துள்ளது.

தற்போது கிடைக்கும் சிறப்பு சலுகைக்கு பிறகு, மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) போன் வெறும் ரூ. 69,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் இத்தகைய சலுகையை சில காலத்திற்கு முன்பு வழங்கியது. ஆனால், இவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் தளம் இந்த போனுடன் இலவச இணைப்பையும் சேர்த்து வழங்குகிறது.

ரூ. 50,000 தள்ளுபடி + ரூ. 10,000 மதிப்பிலான Free கேட்ஜெட்:

புதிய மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) போனை வெறும் ரூ. 69,999 விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டோ பட்ஸ் பிளஸ் (Moto Buds+) என்ற ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் (Bluetooth TWS earbuds) சாதனம் இலவசமாக கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 9,999 என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, போன் வாங்கினால் ரூ. 50,000 தள்ளுபடி + ரூ. 10,000 மதிப்பிலான இயர்பட்ஸ் FREE என்று அபாரம் காண்பிக்கிறது அம்பானி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 50 Ultra Smartphone Gets Rs 50000 Discount With Free Moto Buds+ On Reliance Digital Site
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X