Home
News

அசரடிக்கும் கஸ்டமைஸ் அம்சத்துடன் வெளிவரும் புது Motorola Razr 40 Ultra! அப்படி என்னப்பா ஸ்பெஷல்?

இதுவரை எத்தனையோ வித்தியாசமான ஸ்மார்ட்போன்களை நாம் பார்த்திருப்போம். இப்போது முதல் முறையாக டிஸ்பிளே கஸ்டமைசேஷன் உடன் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் பெயர் Motorola Razr 40 Ultra என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா (Lenovo) நிறுவனத்திற்கு சொந்தமான தலைசிறந்த பிராண்ட் ஆன மோட்டோரோலா (Motorola) இப்போது அதன் போர்ட்போலியோவில் புதிதாக Motorola Razr 40 Ultra என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்களை இணையத்தில் இப்போது டீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்திற்கு முன்பாக சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அசரடிக்கும் கஸ்டமைஸ் அம்சத்துடன் வெளிவரும் புது Motorola Razr 40 Ultra

Motorola Razr+ 2023 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராண்ட் உலகளவில் தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த ஃபோன் மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) என அழைக்கப்படலாம் என்ற வதந்திகளை நாம் சமீபத்தில் கேள்விப்பட்டு வருகிறோம்.

சமீபத்திய கசிவில், பிரபலமான டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ராவின் புதிய ரெண்டர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது பெரிய கவர் டிஸ்ப்ளேவில் சிறந்த தோற்றத்தை அளிக்கிறது. பயனர்கள் தங்கள் விருப்பப்படி இரண்டாம் நிலை டிஸ்பிளேவை கஸ்டமைஸ் செய்துகொள்ளும் விருப்பம் இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன.

Even Blass ஆல் பகிரப்பட்ட படங்களின்படி, கவர் டிஸ்பிளேயின் லே-அவுட், எழுத்துக்கள், எழுத்து அளவு, வண்ணங்கள், ஐகான் வடிவம், காட்சி அளவு மற்றும் தீம்ஸ் ஆகியவற்றைத் தனிப்பயனாக்க பயனர்களுக்கு விருப்பம் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். போனுடன் பல தீம்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. பயனர்களின் விருப்பம் போலவும் தீம்களை செட் செய்துகொள்ளலாம். மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் போல்டபில் சத்தமாக வெளிவரும்.

அசரடிக்கும் கஸ்டமைஸ் அம்சத்துடன் வெளிவரும் புது Motorola Razr 40 Ultra

இந்த செக்கண்டரி டிஸ்பிளே அருகில் டூயல் கேமரா சென்சார்கள் மற்றும் ஃபோனின் மூலையில் வைக்கப்பட்டுள்ள எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றையும் புகைப்படங்கள் தெளிவாக காண்பிக்கிறது. மோட்டோரோலாவின் ஃபிளிப் வகை போல்டபில் போனில், பெரிய அளவிலான டிஸ்ப்ளே ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. Motorola Razr 40 Ultra சாதனம் 6.7' இன்ச் ஃபோல்டிங் OLED டிஸ்ப்ளே மற்றும் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும்.

Motorola Razr 40 Ultra போனின் கவர் டிஸ்ப்ளே 3.5' இன்ச் அளவுடன் இருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. இந்த வரவிருக்கும் Motorola Razr 40 Ultra சாதனம் Qualcomm Snapdragon 8+ Gen1 SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் ஸ்டோரேஜ் உடனும் வரலாம்.

Motorola Razr 40 Ultra போல்டபில் ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3640mAh பேட்டரியை பேக் செய்யும். கேமராவை பற்றி பேசுகையில், மோட்டோரோலா ஃபோன் OIS ஆதரவுடன் 50MP பிரைமரி கேமரா மற்றும் 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் வெளிவரலாம். முன்பக்கத்தில் Motorola Razr 40 Ultra சாதனம் 32எம்பி ஸ்னாப்பரை கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
Motorola Razr 40 Ultra Teased With Large Customisable Foldable Cover Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X