மோட்டோ எக்ஸ் ஜென் 2 விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.
மோட்டடோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ் ஜென் 2, 16 ஜிபி வகை ஸ்மார்ட்போனின் விலையை ரூ.31,999 இல் இருந்து ரூ.29,999 என குறைத்துள்ளது. கருப்பு நிற மோட்டோ எக்ஸ் ஜென் 2, 16 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ரூ.26,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 32ஜிபி வகை போனின் விலை ரூ.29,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் சுமார் ரூ.3,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லெதர் மற்றும் மரத்தாலான பேக் பேனல் கொண்ட 16 ஜிபி வகை மாடல் ரூ.28,999க்கு விறப்னை செய்யப்படுகின்றது.

மோட்டோ எக்ஸ் ஜென் 2, 5.2 இன்ச் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம்.
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா f/2.25 லென்ஸ் 4கே வீடியோ பதிவு செய்யும் வசதி டூயல் எல்ஈடி ரிங் ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா 1080பி வீடியோ பதிவு செய்யும் வசதி இருக்கின்றது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி, LTE, வைபை 802.11 ac, ப்ளூடூத் 4.0LE,மைக்ரோ யுஎஸ்பி, மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டிருப்பதோடு 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications