போட்டிக்கு தயாரான மோட்டோ- இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி: பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

|

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 10-பிட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி82 5ஜி

மோட்டோரோலா மோட்டோ ஜி82 5ஜி

மோட்டோரோலா மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி, ரியல்மி 9 ப்ரோ 5ஜி உள்ளிட்ட சாதனங்களுடன் போட்டிப்போடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரதான கேமரா OIS-ஐ ஆதரிக்கிறது. இதில் 30 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான மோட்டோ

இந்தியாவில் அறிமுகமான மோட்டோ

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி82 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனானது ரூ.25,000 என்ற விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு சில வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.20,000 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 10-பிட் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் பிரதான கேமராவில் ஓஐஎஸ் ஆதரவு என பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி82 5ஜி சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் poOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 10-பிட் வண்ண ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனானது 1 பில்லியன் வண்ணங்களுக்கான ஆதரவை வழங்குகிறது. முன்புற கேமராவிற்கு என டிஸ்ப்ளேயின் மேல் மையத்தில் துளை பஞ்ச் கட்அவுட் இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இநத் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வரையிலான ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு என 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் போதிலும் சாதனத்தின் எடை 173 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரதான கேமராவானது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என இரண்டிற்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவை வழங்குகிறது. தொடர்ந்து 8 எம்பி அல்ட்ராவைட் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மூன்றாம் நிலை கேமரா இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த சாதனத்தின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

கைரேகை ஸ்கேனர் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் அம்சம்

கைரேகை ஸ்கேனர் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் அம்சம்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் அம்சம் இருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 ஆற்றல் உடனான MyUX லேயர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ் பகுதியில் யூஎஸ்பி டைப் சி போர்ட் இருக்கிறது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சலுகைகள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சலுகைகள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இந்தியாவில் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படை மாறுபாடானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு எனவும் ஹை-எண்ட் வேரியண்டானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 உள்சேமிப்பு எனவும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.21,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.22,999 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மூலம் இந்த சாதனம் வாங்குபட்சத்தில் ரூ.1500 வரை தள்ளுபடி பெறலாம். இதன்மூலம் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்டை ரூ.19,999 என வாங்கலாம். மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற முன்னணி விற்பனை தளங்கள் மூலமாக வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Moto G82 5G Launched in India With OIS Support Camera, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X