ஒன்று இல்லை, மூன்று நிறங்களில் வெளியாகும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்

|

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ஒன்று இல்லை, மூன்று நிறங்களில் வெளியாகும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்

மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் விலை இணையத்தில் கசிந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று மாடல்களின் புகைப்படங்களும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு ஏற்ப வளைந்த டூயல் கேமரா அமைப்பு கொண்டிருந்தது. கேமரா லென்ஸ்களுடன் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் ஹோம் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றும் வேலை செய்வது தெரியவந்துள்ளது.

வெளியீட்டிற்கு முன் வெளியான மோட்டோ X4 விலை மற்றும் சிறப்பம்சங்கள்வெளியீட்டிற்கு முன் வெளியான மோட்டோ X4 விலை மற்றும் சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர் மற்றும் 13 எம்பி இரண்டாவது கேமரா, மோனோகுரோம் சென்சார் மற்றும் f/2.0 அப்ரேச்சர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 625 பிராசஸருடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் யுஎஸ்பி டைப்-சி, 3072 எம்ஏஎச் பேட்டரி, முன்பக்க கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஏற்கனவே வெளியான தகவல்களில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இதில் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே, மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூலை 25-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
The Moto G5S Plus comes in three color options.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X