மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பிளஸ் நாளை அறிமுகம்.!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா மோட்டோ ஜி5 எஸ் பிளஸ் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா மோட்டோ ஜி5 எஸ் பிளஸ் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 625எஸ்ஒசி செயலி கொண்டுள்ளது, மேலும் பல தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு:
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் பிளஸ். மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

3000எம்ஏஎச்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications