விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!

|

மோட்டோரோலா நாட்டில் மோட்டோ ஜி42 என்று அழைக்கப்படும் ஜீ சீரிஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் பிஐஎஸ், எஃப்சிசி, இஇசி போன்ற பல சான்றிதழ் தளங்களில் காணப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் மோட்டோரோலா சாதனத்தின் ரெண்டர்கள் ஆன்லைனில் காணப்பட்டுள்ளன. இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் முழுமையாக வெளியாகவில்லை.

மோட்டோ ஜி42 வெளியீடு விரைவில்

மோட்டோ ஜி42 வெளியீடு விரைவில்

மோட்டோரோலா மோட்டோ ஜி42 வெளியீடு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனானது மோனிகர் டிடிஆர்ஏ சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தின் மாடல் எண் XT2233-2 மற்றும் 'HawaiiPlusOLED22 என்ற குறியீட்டுடன் காணப்பட்டிருக்கிறது. சாதனத்தின் ஓஎல்இடி பேனல் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி42 தொடர்பான எந்த தகவலையும் பகிரவில்லை.

மோட்டோரோலா மோட்டோ ஜி42 வடிவமைப்பு

மோட்டோரோலா மோட்டோ ஜி42 வடிவமைப்பு

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் மோட்டோ ஜி42 சாதனத்தின் ரெண்டர்களை பகிர்ந்துள்ளார். செல்பி கேமரா சென்சார் கொண்ட சென்டர் பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு இந்த சாதனம் இருக்கிறது. இந்த சாதனத்தில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் வலது விளிம்பில் காணப்படுகின்றன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் சிம் ட்ரே பகுதி இடது பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு ஸ்பீக்கர் கிரில் வசதியும் இருக்கும்.

பின்புறத்தில் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனானது எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைக்கப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது செவ்வக மாட்யூலில் இடம்பெறும். பின் பேனலின் மையத்தில் மோட்டோ ஐகான் காணப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ ஜி42 அம்சங்கள்

மோட்டோரோலா மோட்டோ ஜி42 அம்சங்கள்

மோட்டோரோலா மோட்டோ ஜி42 அம்சங்கள் குறித்து பார்க்கையில், எஃப்சிசி சான்றிதழானது மோட்டோ ஜி42 4ஜி இணைப்புடன் வரும் இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யூஐ ஆதரவோடு இருக்கும் என வெளிப்படுத்துகிறது. இந்த தகவலை தவிர சாதனத்தின் பிற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்

அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.29,999-விலையில் விற்பனைக்கு வரும்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 778G+ சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா

பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Motorola Moto G42 Listed on BIS and More: Launching Soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X