மோட்டோ ஜி ஜென்3 மிக விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில்!
ப்ளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா மோட்டோ ஜி ஜென் 3 சிறிது நேரத்திற்கு காணப்பட்டதை தொடர்ந்து பின் நீக்கப்பட்டது. யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் மோட்டோ ஜி ஜென் 3 குறித்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு அதன் சிறப்பம்சங்கள் குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
முதலில் ப்ளிப்கார்ட் தளத்தில் காணப்பட்ட ஜென் 3 மோட்டோ ஜி 8ஜிபி போனின் மாடல் நமபர் AP3560AD1K8 மட்டும் தற்சமயம் வெளியாகியுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாதது பல சந்தேகங்களுக்கு வழி வகுத்திருக்கின்றது.

எனினும் முந்தைய மாடலான மோட்டோ ஜி ஜென் 2வை விட மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 610 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் இருப்பதோடு 5 அல்லது 5.2 இன்ச் டிஸ்ப்ளே ஹெச்டி ரெசல்யூஷன் மற்றும் 4ஜி சேவை இருக்கலாம் என கூறப்படுகின்றது.
அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில் மோட்டோ ஜி ஜென் 3 இந்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, மோட்டோரோலா நிறுவனம் முதல் தலைமுறை மோட்டோ ஜி போன்களை 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டதோடு இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜி போன்களை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications