ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட மோட்டோ ஈ வெளியானது

By Meganathan
|

மோட்டோரோலாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போனான மோட்டோ ஈ இரு மாடல்களில் வெளியானது. மோட்டோரோலா மோட்டோ ஈ (Gen 2) மற்றும் மோட்டோரோலா மோட்டோ ஈ (Gen 2) LTE. இவை முறையே ரூ. 7,400 மற்றும் 9,200 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட மோட்டோ ஈ வெளியானது

புதிய மோட்டோ ஈ ஸ்மார்ட்போனின் இரு வகைகளும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் கொண்டுள்ளது. இரண்டுமே சிங்கிள் சிம் வசதி கொண்டு சிறப்பம்சங்களை பொருத்த வரை சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளது. 3ஜி மோட்டோ ஈ (Gen 2) 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரும் மோட்டோ ஈ (Gen 2) LTE 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் மற்றும் இரு மாடல்களிலும் 1 ஜிபி ராம் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட மோட்டோ ஈ வெளியானது

மோட்டோ ஈ (Gen 2) மற்றும் LTE வகைகளும் 4.5-inch qHD டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டிருக்கின்றது. மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 5 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் விஜிஏ முன்பக்க கேமராவும் இருக்கின்றது. 8ஜிபி இன்ட்ரனல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட மோட்டோ ஈ வெளியானது

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மோட்டோ ஈ (Gen 2) வைபை, ப்ளூடூத் 4.00LE, GPS/ A-GPS, GLONASS, எப்எம் ரேடியோ மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டிருக்கின்றதோடு 2390 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. புதிய மோட்டோ ஈ கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைப்பதோடு பல வண்ணங்களில் பேன்ட்களும் கிடைக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Moto E (Gen 2) With Android 5.0 Lollipop Launched. Motorola has announced the second-generation Moto E smartphone in two variants.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X