மோட்டோ ஈ (ஜென் 2) விலை குறைப்பு..!

By Meganathan
|

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகி வரும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஈ (ஜென் 2) விலை இந்தியாவில் ரூ.1,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2,000 வரை தள்ளுபடி பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஈ (ஜென் 2) விலை குறைப்பு..!

இந்தாண்டின் துவக்கதில் வெளியிடப்பட்ட இந்த கருவி 4.5 இன்ச் டிஸ்ப்ளே 540*960 ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 குவாட்கோர் சிப்செட், 1.5 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமராவும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஸ்மார்ட் போன் சந்தையில் தனது போட்டியை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் சியோமி நிறுவனத்தின் எம் 4ஐ, லெனோவோ கே3 நோட் போன்ற புதிய கருவியின் வெளியீடு இந்த விலை குறைப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
The Moto E (Gen 2), the popular durable budget smartphone, has become even more affordable, with Motorola slashing its price by Rs. 1,000.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X