Home
News

கற்றல், பொழுதுபோக்குக்கு தரமான டேப்: இந்தியாவில் கிடைக்கும் மோட்டோ டேப் ஜி20- மொத்த விலையே அவ்வளவுதான்!

மோட்டோரோலா மோட்டோ டேப் ஜி20 ஆண்ட்ராய்டு 11 ஆதரோவடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மோட்டோ டேப் ஜி20 மிட்-ரேஞ்ச் டேப்லெட்டை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப் ஆனது கற்றல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோரோலா டேப்லெட் சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோரோலா டேப் ஜி20

மோட்டோரோலா டேப் ஜி20

மோட்டோரோலா டேப் ஜி20 விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், மோட்டோரோலா மோட்டோ டிபிஏ ஜி20 சாதனமானது 8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி ப்ளஸ் டிடிடிஐ தொழில்நுட்ப காட்சி அனுபவத்துடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22டி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதில் மெமரி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இந்த சாதனத்தில் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. டேப்லெட் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உடன் வருகிறது. இதில் ஆட்டோஃபோகஸ் அம்சத்துக்கு 2 மெகாபிக்சல் முன்புற கேமரா ஆதரவோடு வருகிறது.

5100 எம்ஏஎச் பேட்டரி

5100 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5100 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனம் 10 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியோடு வருகிறது. இந்த பேட்டரி இரண்டு நாட்கள் ஆயுள் வசதியோடு வருகிறது. இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், மோட்டோ டேப் ஜி20 சாதனமானது வைஃபை, ப்ளூடூத் பதிப்பு 5.0, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. ஜிபிஎஸ் ஆதரவுடன் வருகிறது. இது ஃபேஸ் அன்லாக் மற்றும் டால்பி ஏலோஸ் ஆடியோ ஆதரவோடு வருகிறது.

பல்வேறு அணுகல் ஆதரவு

மோட்டோ டேப் ஜி20 ஆனது கூகுள் என்டெர்டெயின்மென்ட் பொழுதுபோக்கு அம்சத்தோடு வருகிறது. மூவிஸ், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், புக்ஸ் உள்ளிட்ட அணுகலையும் கொண்டுள்ளன. இந்த டேப் விலையானது ரூ.10,999 என்ற பிரிவில் இருக்கிறது. இது ஒற்றை பிளாட்டினம் க்ரே வண்ண விருப்பங்களோடு வருகிறது. இந்த சாதனம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் வாங்கலாம், இதற்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 10000-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான இலவச புக், குழந்தைகளுக்கான அணுகல், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதரவுகள் இதில் இருக்கின்றன.

ரூ.10,999 என்ற விலையில் அறிமுகம்

மோட்டோரோலா மோட்டோ டேப் ஜி20 ஆனது ரூ.10,999 என்ற விலைப்பிரிவில் இருக்கிறது. இது பிளாட்டினம் ஆஷ் நிறத்தில் வருகிறது. இந்த சாதனம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் இது வாங்க கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.1000 தள்ளுபடி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்ட்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதானமாக இருக்கும் டேப் பயன்பாடு

பிரதானமாக இருக்கும் டேப் பயன்பாடு

கொரோனா பரவிய காலம் முதல் ஏணைய செயல்பாடுகளும் மாறி இருக்கிறது என்றே கூறலாம். வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்புகள், ஸ்மார்ட்போனில் வீட்டுப்பாடம் எழுதி அனுப்புவது என பல தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன் தேவை பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு சிக்கலை ஏற்படுத்தும் நேரத்தில் இதுபோன்ற பணிகளுக்கு சிறந்த தேர்வாக இருப்பது டேப்லெட்.

லாவா டேப்

லாவா டேப்

இதே விலையில் லாவா நிறுவனம் லாவா மேக்னம் எக்ஸ்எல், லாவா ஆரா, லாவா ஐவரி ஆகிய மூன்று டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று டேப்லெட்களும் கல்வியை மையமாக வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரூ.9000 முதல் ரூ.15000 என்ற விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorol Launches its Moto Tab G20 Tablet in India With Learning, Entertainment Purpose
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X