ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் வெளியாகும் மோட்டோ மேக்ஸ்
மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனை வெளியீடு குறித்து ப்ளிப்கார்ட் இணையதளம் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. விரைவில் மோட்டோ பீஸ்ட், காத்திருங்கள் என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்தாண்டின் இறுதியில் வெளியான மோட்டோ மேக்ஸ் தனித்துவம் கொண்ட பேகே பேனல் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் 3900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டிருப்பதோடு 48 மணி நேர பேக்கப் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மோட்டோரோலாவின் டர்போ சார்ஜரையும் சப்போர்ட் செய்கின்றது, டர்போ சார்ஜர் 8 மணி நேரத்திற்கான சார்ஜை 15 நிமிடங்களில் வழங்கி விடுகின்றது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் கியுஎஹ்டி டிஸ்ப்ளே, 2.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ராம் கொண்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 21 எம்பி ஆட்டோபேகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை LTE சப்போர்ட், வைபை, ப்ளூடூத் 4.0 கொண்டு ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குவதோடு லாலிபாப் அப்டேட்டும் வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications