பட்ஜெட் விலையில் 108MP கேமராவுடன் தரமான Moto G72 ரெடி.! 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க.!

|

மோட்டோரோலா தனது G சீரிஸ் வரிசையின் கீழ் புத்தம் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இது Moto G72 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை, அறிமுகத்திற்கு முன்பாக தெரிந்துகொண்டால், உங்களுக்குச் சுலபமாக இருக்கும்.

Moto G72 இந்தியாவில் அறிமுகமா? எங்கு வாங்கலாம்?

Moto G72 இந்தியாவில் அறிமுகமா? எங்கு வாங்கலாம்?

இப்போது, ​​​​Moto G72 வெளியீட்டிற்கு முன்னதாக, நிறுவனம் சில முக்கிய சிறப்பம்சம் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விபரங்கள் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் மற்ற மோட்டோரோலா ஸ்மார்ட்போனைப் போலவே பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். ஆனால் விற்பனை தேதி இன்னும் நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை.

​​​​Moto G72 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

​​​​Moto G72 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

சரி, இந்த ​​​​Moto G72 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று முதலில் பார்க்கலாம். வரவிருக்கும் புதிய ​​​Moto G72 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்ச விவரங்களை Motorola இப்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய சென்டர்-அலைன் செய்யப்பட்ட பஞ்ச்-ஹோல் pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

WhatsApp பயனர்களுக்கு புது எச்சரிக்கை.! மோசமான பிழையில் இருந்து தப்பிக்க இதை செய்யணும்.!WhatsApp பயனர்களுக்கு புது எச்சரிக்கை.! மோசமான பிழையில் இருந்து தப்பிக்க இதை செய்யணும்.!

தரமான டிஸ்பிளே கிளாரிட்டி உடன் பெஸ்ட் ஸ்டோரேஜ்

தரமான டிஸ்பிளே கிளாரிட்டி உடன் பெஸ்ட் ஸ்டோரேஜ்

இது 1,300 nits பிரைட்னெஸ், 10-பிட் கலர், DCI-P3 அம்சம் மற்றும் HDR10 ஆதரவுடன் வருகிறது.இந்த புதிய ​​​​Moto G72 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் பற்றிப் பேசுகையில், இந்த Moto G72 டிவைஸ் 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் உடன் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 108 மெகாபிக்சல் கேமராவா?

பட்ஜெட் விலையில் 108 மெகாபிக்சல் கேமராவா?

இந்த ஸ்மார்ட்போன் சாதனம், MediaTek Helio G99 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஃபோன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 OS அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய Moto G72 ஸ்மார்ட்போனின் வம்மரை அம்சம் பற்றிப் பேசுகையில், இது 108 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

Moto G72 ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் இருக்கிறதா?

Moto G72 ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் இருக்கிறதா?

இதில் ஒரு டெப்த் சென்சார், மற்றும் இதில் பிரத்தியேக மேக்ரோ சென்சாரும் இடம்பெறும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டால்பி அட்மோஸ் அம்சத்தை ஆதரிக்கும் டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில் இருக்கும் என்றும் நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இது 33W சக்தி கொண்ட பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Moto G72 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Moto G72 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

இது IP52-மதிப்பிடப்பட்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Moto G72 ஸ்மார்ட்போன் Meteorite Gray மற்றும் Polar Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த புதிய Moto G72 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்களை நிறுவனம் டீஸ் செய்யவில்லை, இருப்பினும், நமக்கு தெரிந்த தகவலின் படி, இந்த Moto G72 சாதனம் இந்தியாவில் ரூ.19,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola is Launching Brand New Moto G72 Phone On October 3 Via Flipkart With 108MP Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X