சபாஷ்: பிரபலமான MOTOROLA 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்த பிளிப்கார்ட்.!
பல முன்னணி செல்போன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் பிரபலமான மோட்டோரோலா போனுக்கு பளிப்கார்ட் தளத்தில் ஆபர் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மோட்டோரோலா ஜி78 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது ஆபர் வழங்கப்பட்டுள்ளது. குறிபபாக மோட்டோரோலா ஜி78 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ள 22 சதவீதம் தள்ளுபடி மூலம் இந்த போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080 X 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 930 சிப்செட் உடன் IMG BXM-8-256 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications