Motorola சர்ப்ரைஸ்.. பிரபலமான 5ஜி போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.. உற்சாகத்தில் பயனர்கள்..
கடந்த ஜனவரி மாதத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைத்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola g64 5G) போன்களுக்கும் தற்போது ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட் கிடைக்கத் தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்
குறிப்பாக மோட்டோரோலா ஜி64 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைப்பதால் பயனுள்ள வகையில் இருக்கும். அதுவும் மென்மையான சிஸ்டம் கிராபிக்ஸ், மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் உள்ள அனைத்து இந்த புதிய அப்டேட் மூலம் பெறமுடியும்.

மேலும் ஆன்லைனில் வெளியான ஸ்கிரீன்ஷாட்-ல் 2.26ஜிபி எடையுள்ள VITD35H.83-20-5 பதிப்பு எண்ணுடன் நிலையான ஆண்ட்ராய்டு 15 அப்டேட் மோட்டோரோலா ஜி64 5ஜி போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஜி64 போனுக்கு கிடைத்துள்ள புதிய ஆண்ட்ராய்டு அப்டேட பேட்டரி ஆயுளை மேம்படுத்துவதோடு பல்வேறு புதிய அம்சங்களையும் வழங்கும். மேலும் இப்போது மோட்டோரோலா ஜி64 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா ஜி64 5ஜி அம்சங்கள் (Motorola G64 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது.
6.5-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி64 5ஜி போன். மேலும் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (Octa Core 6nm MediaTek Dimensity 7025)சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இதில் ஐஎம்ஜி பிஎக்ஸ் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல்
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்படேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அதேபோல் 6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging) வசதியும் உள்ளது.
தரமான டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் மின்ட் கிரீன் (Mint Green), பேர்ல் ப்ளூ (Pearl Blue), ஐஸ் லைலாக் (Ice Lilac) ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








