ஹீலியோ ஜி85 உடன் மோட்டோ ஜி31 இந்திய அறிமுகம் உறுதி: போட்டி கடுமையாக இருக்கும் போல!

|

மோட்டோரோலா சமீபத்தில் சர்வதேச சந்தையில் அதன் ஜி சீரிஸ் தொடரின் கீழ் மோட்டோ ஜி 31 உட்பட ஐந்து சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மோட்டோ ஜி41 தவிர அனைத்து சாதனங்களையும் இந்த பிராண்ட் நாட்டில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது மோட்டோ ஜி31 பிஐஎஸ் சான்றிதழில் காணப்பட்டது. இதன் மூலம் இந்த சாதனத்தின் இந்திய அறிமுகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி31 சாதனத்தின் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

மோட்டோரோலா ஜி31 இந்திய அறிமுகம்

மோட்டோரோலா ஜி31 இந்திய அறிமுகம்

91மொபைல்ஸ் அறிக்கையின்படி, மோட்டோரோலா ஜி31 இந்தியாவில் இந்த மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் இந்தியா வெளியீடு நவம்பர் 30 அல்லது டிசம்பர் முதல் வாரம், இரண்டாவது வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா மோட்டோ ஜி31 மற்றும் ஜி200 இரண்டு ஸ்மார்ட்போனையும் ஒன்றாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பிஐஎஸ் சான்றிதழில் காணப்பட்ட மோட்டோ ஜி71 மற்றும் ஜி51

பிஐஎஸ் சான்றிதழில் காணப்பட்ட மோட்டோ ஜி71 மற்றும் ஜி51

அதேபோல் மோட்டோ ஜி31 உடன் பிஐஎஸ் சான்றிதழில் காணப்பட்ட மோட்டோ ஜி71 மற்றும் ஜி51 சாதனத்தின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் மோட்டோரோலா அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரவிருக்கும் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்களையும் டிப்ஸ்டர் மூலம் பகிரப்பட்டுள்ளது. மோட்டோ ஜி31 விலை விவரங்கள் குறித்து பார்க்கையில் இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராண்டில் வேறு எந்த சேமிப்பக மாடலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி31 அம்சங்கள்

மோட்டோ ஜி31 அம்சங்கள்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜி சீரிஸ் சாதனங்களில் மோட்டோ ஜி31 மிகவும் மலிவு விலையில் இருக்கிறது. மோட்டோ ஜி31 இன் இந்திய மாறுபாட்டின் அம்சங்கள் முழுமையாக தெரியவில்லை, இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேசை மாடலை போன்றே இந்திய மாடல் விவரக்குறிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.

முழு எச்டி ப்ளஸ் தீர்மானம்

முழு எச்டி ப்ளஸ் தீர்மானம்

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் தீர்மானம் மற்றும் நிலையான 64 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதித்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஓஎல்இடி பேனல் உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியோடு வருகிறது இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா அமைப்புகளோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 10 வாட்ஸ் நிலையான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. கூடுதலாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியும் இதில் இருக்கிறது. இணைப்பு அம்சங்களை பொறுத்தவரையில் இந்த ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆடியோ ஜாக் ப்ளூடூத் வி5 மற்றும் வைஃபை ஏசி ஆகியவைகளுடன் வருகிறது.

வெளியான விலை தகவல்

வெளியான விலை தகவல்

வெளியான விலை தகவல் குறித்த கசிவின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 8 மற்றும் வரவிருக்கும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் 50 எம்பி கேமராக்கள், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வரும் என கூறப்படுகிறது. இருப்பினும் மோட்டோ ஜி31 சாதனத்தில் 5ஜி இணைப்பு இல்லை என்பது சற்று பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக புதுப்பிப்பு விகிதத்தை ஆதரிக்காது என்பது இதன் விலை வரம்பில் இருக்கும் குறைபாடாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மோட்டோரோலா ஜி சீரிஸ்

மோட்டோரோலா ஜி சீரிஸ்

பிரபல ஸ்மார்ட்போன் தயாராப்பாளரான மோட்டோரோலா இந்திய சந்தையில் தனது சந்தையை வலுப்படுத்த தயாராகி வருகிறது. மோட்டோரோலா ஜி சீரிஸ்-ல் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன்பு உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் மோட்டோ ஜி200, மோட்டோ ஜி71, மோட்டோ ஜி51, மோட்டோ ஜி 41 மற்றும் மோட்டோ ஜி31 ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோரோலா நிறுவனம் சிறப்பான மேம்பட்ட அம்சங்களோடு இந்த சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

மோட்டோ ஜி தொடரில் உள்ள மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888+ செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயின் புதுப்பிப்பு வீதம் 144 ஹெர்ட்ஸ் ஆகும். மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola G31 Launch Confirms in india by BIS Certificate: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X