10 ஆயிரம் விலையில் இப்படி ஒரு புது போனா? Motorola-வில் இது என்ன புது மாடல்?
மோட்டோரோலாவின் புதிய 4ஜி போன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஜி14 (Motorola G14) ஆனது தரமான அம்சங்களுடன் மிரட்டலான ஸ்பெக்ஸ் உடன் வருகிறது. இது அதன் முன்னோடியான மோட்டோரோலா ஜி 13 போன்ற விலையில் இருக்கலாம்.
மோட்டோரோலா நிறுவனம் இந்த ஜூலை மாதம் இந்தியாவில் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனா மோட்டோரோலா ரேசர் 40 ஃபிலிப் (Motorola Razr 40 Flip) போன் சீரிஸை வெளியிட்ட பிறகு, நிறுவனம் இப்போது அதன் மலிவு விலையில் Moto G வரிசையை இந்திய சந்தையில் ஒரு புதிய போன் உடன் அப்டேட் செய்துள்ளது.

மோட்டோரோலா பிராண்ட், மோட்டோரோலா G13 4G சாதனத்தை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது, நிறுவனம் புதிய Motorola G14 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இது Flipkart இல் ஒரு டீஸர் பக்கம் அதே நாளில் முன்பதிவு செய்யப்படும் என்பதை வெளிப்படுத்தியது.
வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகளை பற்றிய சில தகவலையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டோரோலா G14 சாதனம் யூனிஸாக் டி616 சிப்செட் உடன் வருகிறது. இது மீடியாடெக் ஹெலியோ ஜி85 (Mediatek Helio G85) சிப்செட்டை கைவிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் Dolby Atmos மூலம் இயக்கப்படும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
இது 6.5' இன்ச் FHD+ டிஸ்ப்ளே உடன் மீண்டும் வருகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 4ஜிபி ரேம் வேரியண்ட் உடன் 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 1டிபி வரை மைக்ரோ எஸ்டி யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில், இது டூயல் கேமரா அமைப்பில் 50MP பிரைமரி கேமரா சென்சார் உடன், 8MP அல்லது 2MP உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோரோலா ஜி14 சாதனம் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது மொத்தமாக 94 மணிநேர பிளே பேக் நேரத்தை உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 20W கொண்ட பாஸ்ட் சார்ஜிங் உடன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட் போன் சாதனம் ஆண்ட்ராய்டு 13 உடன் முன்பே நிறுவப்பட்டிருக்கும், மேலும் மோட்டோரோலா ஆண்ட்ராய்டு 14 மற்றும் 3 வருட பாதுகாப்பு இணைப்புகளுக்கும், அப்டேட்டிற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூறப்படுகிறது.
இது ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) நிறங்களில் வெளிவரும். மற்ற அம்சங்களை பொறுத்த வரை, இது ஒரு பக்க கைரேகை சென்சார் உடன் வரும். அதே நேரத்தில் மென்பொருள் அடிப்படையிலான பேஸ் அன்லாக் அம்சத்தையும் அமைக்கும். மோட்டோரோலா G14 இல் பட்ஜெட் பயனர்கள் விரும்பும் அம்சம் இரட்டை சிம் ஆதரவு ஆகும். இது IP54 மதிப்பீடு பெட்ரா வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துட வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்களை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்தியாவில் மோட்டோரோலா ஜி13 விலை ரூ. 9,999 விலையில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ஜி 14 அதே வரிசையில் தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் செயலியைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications








