தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!

|

Frontier என பெயரிடப்பட்டுள்ள மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா ஃப்ளாக்ஷிப் சாதனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரா ஃப்ளாக்ஷிப் என குறிப்பிடுவதற்கு ஏற்ப அம்சங்கள் அனைத்தும் அதீத வகையில் இருக்கிறது. இந்த சாதனத்தின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இதுவரை வெளியான மோட்டோ சாதனங்களில் அதிக சார்ஜிங் என்பது மோட்டோ எட்ஜ் 30 ப்ரோவில் இருந்த 68 வாட்ஸ் சார்ஜிங் தான். தற்போது இதைவிட இரண்டு மடங்கு அதிவேக சார்ஜிங் உடன் சாதனத்தை வெளியிட நிறுவனம் தயாராகி இருக்கிறது. மோட்டோரோலா நிறுவனம் Motorola Frontier எனும் சாதனத்தை 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 125 வாட்ஸ் சார்ஜிங் என்பது மோட்டோரோலாவில் புதிது என்றாலும் OnePlus, Oppo மற்றும் Realme போன்ற நிறுவனங்கள் 125W சார்ஜிங் உடன சாதனங்களை வெளியிட்டு இருக்கிறது.

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Lenovo Group China CEO சென் ஜின், மோட்டோரோலாவின் 125W சார்ஜிங் அடாப்டர் குறித்து டீஸ் செய்தார். 125 வாட்ஸ் சார்ஜர் ஆதரவுடன் வெளியாகும் ஸ்மார்ட்போனின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், பிரபல டிப்ஸ்டர் தகவலின்படி இது Motorola Frontier ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

200 எம்பி கேமரா ஆதரவா?

200 எம்பி கேமரா ஆதரவா?

லெனோவா க்ரூப் இரண்டு ஃப்ளாக்ஷிப் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒன்று மோட்டோரோலாவின் கீழ் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அல்ட்ரா ஃப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கலாம். வரவிருக்கும் Motorola Frontier ஸ்மார்ட்போனில் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர், 200 எம்பி கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் ஆதரவு இடம்பெறலாம் என கணிக்கப்படுகிறது.

144 ஹெர்ட்ஸ் உயர் புதிப்பிப்பு வீத டிஸ்ப்ளே

144 ஹெர்ட்ஸ் உயர் புதிப்பிப்பு வீத டிஸ்ப்ளே

Frontier தொடரில் வரும் இந்த ஸ்மார்ட்போனானது Motorola Frontier 22 என பெயரிடப்பட்டிருக்கலாம். இதில் எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்களை விரிவாக பார்க்கலாம். Motorola Frontier 22 ஆனது முழு HD+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.67-inch OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 144 ஹெர்ட்ஸ் உயர் புதிப்பிப்பு வீத ஆதரவைக் கொண்டிருக்கலாம்.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 உடனான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும் எனவும் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

60 எம்பி செல்பி கேமரா ஆதரவு

60 எம்பி செல்பி கேமரா ஆதரவு

கேமரா ஆதரவுகளை பொறுத்தவரை, Motorola Frontier 22 முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 60 எம்பி கேமரா இடம்பெறலாம். முன்னதாக இவான் ஃப்ளாஷ் மோட்டோரோலா ஃப்ராண்டியரின் ரெண்டர்களை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்மார்ட்போன் வளைந்த காட்சி மற்றும் கடினமான பின்புற பேனலுடன் கூடிய ப்ரீமியம் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. சாதனத்தின் பின்புறத்தில் ஒரு பெரிய சென்சார் உடன் இரண்டு சிறிய சென்சார்கள் இருக்கின்றன. பின்புறத்தில் மோட்டோரோலா லோகோவும் இருக்கிறது. இதில் ஒரு சிம் ட்ரே மற்றும் ஸ்பீக்கர் க்ரில் உடன் யூஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி இருக்கிறது.

சமீபத்தில் அறிமுகமான மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்

சமீபத்தில் அறிமுகமான மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.27,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

இரட்டை 50 எம்பி கேமரா ஆதரவு

இரட்டை 50 எம்பி கேமரா ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 778G+ சிப்செட் வசதி உள்ளது. MyUX அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் இயங்குகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என 32எம்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Frontier Might be Launching With 200MP Camera, 125W Charging: Expected details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X