நாங்களும் கொடுப்போம்- இது எப்படி இருக்கு: 125வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ், 194எம்பி கேமரா: மோட்டோரோலா ஃபிரான்டியர்!
மோட்டோரோலா ஃபிரான்டியர் ஸ்மார்ட்போனானது எச்டிஆர் 10 ஆதரவோடு வரும் எனவும் இது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வரும் என கூறப்படுகிறது. வெளியான அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்எம்8475 சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா ஃபிரான்டியர் என்ற புதிய சாதனம்
லெனோவா ஆதரவு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் நிறுவனமான மோட்டோரோலா., மோட்டோரோலா ஃபிரான்டியர் என்ற புதிய சாதனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சமீபகாலமாகவே வைரலாகி வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. மோட்டோரோலா ஃபிரான்டியர் ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என வெளியான தகவல்கள் கூறுகிறது.

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டிருக்கும் எனவும் இது ஃப்ளாக்ஷிப் குவால்காம் செயலி உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு வரும் எனவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விவரங்களை வெளியிடப்படவில்லை என்றாலும் வெளியான தகவல்களை பார்க்கலாம். நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சமீபத்தில் புதிய 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்தின் படத்தை பகிர்ந்தார். இது மோட்டோரோலா ஃபிரான்டியர் குறியீடாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

125 வாட்ஸ் சார்ஜிங் வசதி
லெனோவாவின் மொபைல் ஃபோன் வணிகத்திற்கான பொது மேலாளர் தனது வெய்போ கணக்கு மூலம் புதிய 125 வாட்ஸ் சார்ஜரின் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த சார்ஜர் 125 வாட்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இது ஒரு சிறிய அளவிலான சார்ஜர் ஆகும். இது 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும், இதையடுத்து மோட்டோரோலா பிராண்டின் சாதனம் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் தொடங்கப்படும் வருவதற்கான சாத்தியம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மோட்டோரோலா ஃபிரான்டியர் சிறப்பம்சங்கள்
மோட்டோரோலா ஃபிரான்டியர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மோட்டோரோலா ஃபிரான்டியர் ஸ்மார்ட்போனானது எச்டிஆர் 10 ஆதரவுடன் வரும் எனவும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்புவீத்துடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சில அறிக்கைகளின்படி, ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்எம்8475 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

194 எம்பி முதன்மை கேமரா
மோட்டோரோலா ஃபிரான்டியர் கேமரா விவரங்கள் குறித்து பார்க்கையில், மோட்டோரோலா ஃபிரான்டியர் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 194 எம்பி முதன்மை கேமரா என கூறப்படுகிறது. மேலும் பிற கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

60 எம்பி செல்பி கேமரா வசதி
இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 60 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மோட்டோரோலா ஃபிரான்டியர் ஸ்மார்ட்போனானது 125 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இதில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.2, என்எஃப்சி, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Image Source: winfuture


Click it and Unblock the Notifications