இந்த தப்பை செஞ்சிடாதீங்க.. Motorola போனில் Black Screen பஞ்சயாத்து.. கதறும் கஸ்டமர்ஸ்.. எந்த மாடல்?
பிளாக் ஸ்க்ரீன் சிக்கல் (Black screen issue) ஏற்படுவதாகவும், கூடவே பெர்ஃபார்மென்ஸில் (Performance) குறைபாட்டை சந்திப்பதாகவும் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன் ஒன்றை வைத்து இருக்கும் ஓனர்கள், புகார் அளித்த வண்ணம் உள்ளனர். அதென்ன மாடல்? இந்த பிரச்சனைகள் ஏற்பட என்ன காரணம்? இதில் இருந்து தப்பிக்க எதை செய்யாமல் இருக்க வேண்டும்? இதோ விவரங்கள்:
மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் 50 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை (Android 15 Update) அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே அப்டேட் எட்ஜ் 50 ஃபியூஷன் (Edge 50 Fusion) மற்றும் எட்ஜ் 50 அல்ட்ரா (Edge 50 Ultra) ஆகிய மாடல்களுக்கும் வந்தது. அந்த மாடல்களில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடல் அப்படி இல்லை!

இந்தியாவில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு வெளிவருவதாக கூறப்படும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டில் சிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை பெற்ற பயனர்களின் கூற்றுப்படி, அவர்கள் பிளாக்ஸ்க்ரீன், ஃபிரீசிங் சிக்கல்கள் எதிர்கொள்கின்றனர். மேலும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி லைஃப்பிலும் பின்னடைவு ஏற்படுத்தகவும் (ரெட்டிட் தளம் வன்மையாக) புகார் செய்துள்ளனர்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடலுக்கு வந்துள்ள ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் ஆனது சுமார் 1.77ஜிபி அளவுடையதாக இருக்கிறது மற்றும் இது ஃபார்ம்வேர் வெர்ஷன் V1UM35H.10-38-1 ஐ கொண்டுள்ளது. சேஞ்ச்லாக்கின் (Changelog) படி, இந்த அப்டேட் வழியாக ஸ்மூத் ஆன கிராபிக்ஸ், வேகமான ஆப்ஸ் செயல்திறன், ஸ்கிரீன் ரெக்கார்டிங் நோட்டிஃபிகேஷன் மற்றும் மொழிகளுக்கு இடையில் எளிதாக மாறுவதற்கான திறன் ஆகியவைகள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் சேர்க்கப்படும்.
இருப்பினும், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவின் சில பயனர்கள், குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட்டை இன்ஸ்டால் செய்த சில நாட்களுக்கு பிறகு,தங்கள் ஸ்மார்ட்போனில் பிளாக்ஸ்க்ரீன் சிக்கல், ஃபிரீசிங் சிக்கல், பெர்ஃபார்மென்ஸ் சிக்கல், பேட்டரி லைஃப் சிக்கல் ஆகியவைகளை எதிர்கொண்டதாக கூறுகிறார்கள்.
எனவே நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனாய் வைத்து இருக்கும் பயனராக இருந்தால், குறிப்பிட்ட அப்டேட் உங்களுக்கு வந்தாலும் கூட அதை உடனடியாக இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லது. மோட்டோரோலா நிறுவனம் இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான சொல்யூஷனை வெளியிடும் வரை காத்திருக்கவும்.
கடந்த மாதம் (2024 டிசம்பரில்) ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்றும் கூட இதேபோன்ற அப்டேட் சிக்கலை எதிர்கொண்டது என்பதும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனிற்கான லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) அப்டேட்டை வெளியிட்டு இருந்தது.
ஒன்பிளஸ் நோர்ட் 4-க்கு வந்த லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் ஆனது ஸ்மார்ட்போனின் கேமராவை பயன்படுத்த முடியாததாக ஆக்குவதாக ஓனர்கள் புகார் அளித்து இருந்தனர். இந்த சிக்கலால் பாதித்த ஒரு பயனரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் படங்களை கிளிக் செய்யும் போது தான் சிக்கல்கள் ஏற்பட தொடங்குகிறது.
இதுகுறித்து அவர் பகிர்ந்த புகைப்படத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 4 வழியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் குறிப்பிடத்தக்க நாய்ஸ் (Noise) மற்றும் விவரங்கள் (Details) சரியாக இல்லாததை பார்க்க முடிகிறது. இதேபோல வ்யூஃபைண்டரில் உள்ள படம் சாதாரணமாக தெரிவதாகவும், இருப்பினும், ஃபைனல் ரிசல்ட் ஆனது ஓவர் எக்ஸ்போஷராக உள்ளதும், அது நல்ல முறையிலான கான்ட்ராஸ்ட்டையும் கொண்டிருக்கவில்லை என்கிற புகாரும் எழுந்தன. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஓனர்களை போலவே, லேட்டஸ்ட் ஓஎஸ்- ஐ அப்டேட் செய்த பின்னரே இந்த சிக்கல் எழுதவாக ஒன்பிளஸ் நோர்த் 4 ஸ்மார்ட்போன் ஓனர்கள் புகார் அளித்தனர்.


Click it and Unblock the Notifications








