பட்ஜெட்ல் கிங்னா அது எப்போவுமே Moto தான்.. மார்க்கெட்டை கலக்க வரும் Motorola Edge 50 Neo.. விலை கம்மியா?
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் என்னவாக இருக்குமென்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அடுத்தபடியாக, மோட்டோரோலோ பிராண்டின் கீழ் அறிமுகமாகவிருக்கும் புதிய சாதனமாக மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) அல்லது மோட்டோ S50 (Moto S50) என்ற மாடல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் செக்மென்ட் விருப்பமாக அறிமுகம் செய்யப்படும் என்றும் லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சமீபத்தில் வெளியான லீக் தகவலில் மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மாடல் எண் XT2409-5 என்ற குறிப்பீட்டுடன், சீனாவின் MIIT / TENAA தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம், மோட்டோரோலாவில் இருந்து வெளிவர தயாராக இருக்கும், மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) அல்லது மோட்டோ S50 (Moto S50) ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo):
உலக சந்தையில் இந்த சாதனம் மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதே ஸ்மார்ட்போன் சாதனம் மோட்டோ S50 (Moto S50) என்ற பெயருடன் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் மற்றும் நிறங்கள் குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இந்த புதிய மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) அல்லது மோட்டோ S50 (Moto S50) என்ற மாடல் பிளாக் Grisaille (black), லாட்டே Latte (beige), நாட்டிக்கள் ப்ளூ Nautical Blue, மற்றும் பொன்சியான Poinciana (red) ஆகிய 4 நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது இங்கே.
புதிய மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) அல்லது மோட்டோ S50 (Moto S50)6.36" இன்ச் அளவு கொண்ட 1200 × 2670 பிக்சல் உடன் 1.5K OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்றவற்றை வழங்குகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 பிராசஸர் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 8GB ரேம் அல்லது 12GB LPDDR4X ரேம் (RAM) உடன் 256GB அல்லது 512GB ஸ்டோரேஜ் உடன் வரும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஓஎஸ் உடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் 50MP ரியர் கேமரா OIS ஆதரவு, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா போன்றவற்றை கொண்டிருக்கும். இது 32MP செல்பி கேமரா ஆதரவை கொண்டுள்ளது.
இது 4310mAh பேட்டரி மற்றும் 68W டர்போ சார்ஜிங் உடன் வருகிறது. இது 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11ax (2.4GHz/5GHz) MIMO, Bluetooth 5.3, GPS, USB Type-C போன்ற ஆதரவை பெறுகிறது.


Click it and Unblock the Notifications








