ஆஹா..ஆஹா ஒளி வந்துவிட்டது! Motorola Edge 40 அறிமுகமாகிவிட்டது! புது பிரீமியம் மிட்-ரேஞ் போன் இதோ!
ஸ்மார்ட்போன் பிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ஒருவழியாக அறிமுகமாகிவிட்டது. மோட்டோரோலவுக்கு (Motorola) சொந்தமான மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) சாதனம் இன்று உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தா இப்போ வரும்.. அந்தா அப்போ வரும்... இதோ கிட்ட நெருங்கி வந்துவிட்டது என்று நீண்ட காலமாக Motorola Edge 40 இன் வருகையை பல வதந்திகள் தொடர்ந்து பரிந்துரைத்து வந்தது. இறுதியாக, மோட்டோரோலா எட்ஜ் 40 உலகளவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 போணுக்கு பிறகு அறிமுகமாகும் பிராண்டின் பிரீமியம் மிட்-ரேஞ்ச் சாதனம் இதுவாகும்.

Motorola Edge 40 சாதனம் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வளைந்த கர்வுட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது டூயல் ரியர் கேமரா சென்சார், சாண்ட்பிளாஸ்ட் செய்யப்பட்ட அலுமினிய பிரேம், வீகன் லெதர் மேட் அக்ரிலிக் பேக் ஆப்ஷன் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 8020 சிப்செட் உடன் வருகிறது. இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,600mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 பற்றிய குயிக் ஸ்பெசிபிகேஷன் விபரம் இவை தான். இந்த சாதனத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், தொடர்ந்து படியுங்கள். இன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 144Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் கொண்ட 2400 X 1080 பிக்சல்கள் தீர்மான உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கிறது.
இது 360Hz டச் சாம்பிளிங் வீதம், HDR10+ மற்றும் 1200nits பீக் பிரைட்னஸ் உடன் 6.55' இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளேவாக வருகிறது. இந்த Motorola Edge 40 சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் மூலம் Mali-G77 MC9 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்குகிறது.

இணைப்பு விருப்பங்களில் இந்த சாதனம் 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS, USB Type-C மற்றும் NFC ஆகியவற்றை கொண்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 40 ஆனது 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.
இறுதியாக, இந்த போனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP குவாட் பிக்சல் டெக்னாலஜி, OIS மற்றும் 13MP அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 120 டிகிரி வியூ டூயல் கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது. Motorola Edge 40 ஆனது EURO 599.99 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 54,200 விலையில் வருகிறது.
இது எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black), நெபுலா க்ரீன் (Nebula Green) மற்றும் லூனார் ப்ளூ (Lunar Blue) வண்ணங்களில் வருகிறது. வரவிருக்கும் நாட்களில் ஐரோப்பா முழுவதும் இந்த போன் விற்பனைக்கு வரும், மேலும் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளுக்கும் வெளிவரும். இதனை தொடர்ந்து இந்தியாவில் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








