ஆர்டர் பிச்சிக்குது.. 68W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. புது மோட்டோரோலா போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பா இந்த போன் பெரிய டிஸ்ப்ளே, தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
அதாவது அக்டோபர் 8-ம் தேதி பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையில் வெளிவந்தது.

ஆனால் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
குறிப்பாக இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா வருகிறது.
இதில், மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் லெதர் மற்றும் கிளாஸ் பேக் பேனல் வேரியண்ட் ஆப்சன் இருக்கிறது.
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைக்கும் பயனர்கள் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








