Motorola Edge 40 ஆபர்.. இப்போ விட்டா இனி கிடைக்காது.. Flipkart-ல் குவியும் கூட்டம்!
பிளிப்கார்ட் (Flipkart) வளைத்தளத்தில் மொபைல் போனான்ஸா சேல் (Mobile Bonanza Sale) என்கிற சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய, மொபைல் போன்களின் மீதான இந்த பிரத்யேக விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.
பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையின் கீழ் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சலுகை / தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இருந்தாலும், மிகவும் ஸ்லிம் ஆன டிசைன் மற்றும் வாட்டர் ப்ஃரூப் திறனுடன் வரும் ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் மீதான ஆஃபர் அனைவரையும் ஈர்க்கும்படி உள்ளது!

அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையின்கீழ் எட்ஜ் 40 5ஜி-க்கு கிடைக்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தும் பட்சத்தில், இந்த போனின் இறுதி விலையை ரூ.10,000 க்குள் கொண்டுவர முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி ஸ்மார்ட்போனின் போனின் அசல் விலை (MRP) ரூ.34,999 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் வலைத்தளமானது இந்த ஸ்மார்ட்போனின் மீது 22% நேரடி தள்ளுபடியை (Initial Discount) வழங்குகிறது. அதாவது ரூ.8000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நேரடி தள்ளுபடியை தவிர்த்து, மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேன்ஜ் ஆஃபரும் (Exchange Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், நல்ல நிலையில் உள்ள உங்களுடைய பழைய மொபைல் போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.18,900 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
ஒருவேளை மேற்கண்ட 2 தள்ளுபடிகளையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், மோட்டோரோலா எட்ஜ் 30 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.8,099 க்கு கொண்டுவர முடியும். முன்னரே குறிப்பிட்டபடி, பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதியன்று முடிவடைய உள்ளது; அதற்குள் மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி மீது சலுகையை பயன்படுத்திக்கொள்ளவும்.

மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் (MediaTek Dimensity 8020 Chipset), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3டி கர்வ்டு டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4400mAh பேட்டரியை வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + அல்ட்ராவைட் லென்ஸுடன் 13-மெகாபிக்சல் சென்சார் மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் உடனான கேமரா செட்டப் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
நடந்து கொண்டிருக்கும் பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையில், சலுகை விலையில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,399 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதேபோல ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro) ஸ்மார்ட்போன் மிகப்பெரிய விலை குறைப்பை பெற்றுள்ளது. பிளிப்கார்ட்டில் தற்போது இது ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது போக்கோ எக்ஸ்5 ப்ரோ மீது ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது.
மேலும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வழியாக ரூ.39,999க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ 44,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது நத்திங் போன் 2 மீது ரூ.5,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது. கடைசியாக ரெட்மி 12சி (Redmi 12C) ஸ்மார்ட்போன் ஆனது வெறும் ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








