அடேங்கப்பா இப்படி ஒரு சூப்பர் போனா இந்த புது Motorola Edge 30 Ultra.! எல்லாமே டாப் அசத்தல்.!

|

அடேங்கப்பா.! இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? என்று எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Motorola நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உலகம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. Motorola Edge 30 Ultra என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

புது Motorola Edge 30 Ultra போன் தரமான அம்சத்துடன் அறிமுகம்

புது Motorola Edge 30 Ultra போன் தரமான அம்சத்துடன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போனிற்காக இந்திய ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருக்க ஒரு முக்கியமான காரணம் என்று சொல்வதற்கு இதில் ஒன்றல்ல அதற்கும் மேலான சிறந்த விஷயங்கள் இருக்கிறது. இதில் முதலில் முக்கியமான அம்சம், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறது. சமீபத்திய Snapdragon 8+ Gen 1 சிப்செட் என்பது மிகவும் சக்தி வாய்ந்த அல்டிமேட் சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் 200MP மெயின் கேமராவா?

இந்த போனில் 200MP மெயின் கேமராவா?

அடுத்த சிறப்பான விஷயம் என்றால், இந்த போனின் கேமராவை நாம் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். ஏனெனில், இது 200MP மெயின் கேமரா சென்சார் உடன் வருகிறது. இது இன்றுவரை எந்த ஃபோனிலும் காணப்படாத அதிகபட்ச மெகாபிக்சல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது இந்த புதிய டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போனின் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா என்ன விலையில் அறிமுகமாகும்?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா என்ன விலையில் அறிமுகமாகும்?

வரவிருக்கும் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் அடிப்படை மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் ஆரம்ப விலை EUR 900 ஆகும். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 72,100 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை மாடலின் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Motorola Edge 30 Ultra சிறப்பம்சம்

Motorola Edge 30 Ultra சிறப்பம்சம்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட 144 ஹெர்ட்ஸ் உடன் கூடிய முழு எச்டி+ தெளிவுத்திறனுடன் கூடிய pOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது உங்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 60MP செல்பி கேமரா உடன் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பை பெற்றுள்ளது. இந்த போனின் ரியர் கேமரா 200MP சாம்சங் HP1 பிரைமரி சென்சார் உடன், 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வருகிறது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

மிகச் சிறந்த பிளாக்ஷிப் மாடலா?

மிகச் சிறந்த பிளாக்ஷிப் மாடலா?

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MyUX 4.0 இயங்குதளத்தில் இயக்குகிறது. Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒரு USB டைப்-சி போர்ட் உடன் வருகிறது. உண்மையிலேயே, இந்த ஸ்மார்ட்போன் இன்றைய தேதியில் மிகச் சிறந்த பிளாக்ஷிப் மாடலாகும்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Ultra with Snapdragon 8+ Gen 1 SoC Launched Know The Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X