மே 12 உறுதி: 50 எம்பி கேமரா, டர்போ பவர் சார்ஜிங் ஆதரவோடு மோட்டோரோலா எட்ஜ் 30!

|

மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனத்தின் இந்திய வெளியீட்டு தேதி மே 12 என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். மோட்டோரோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.36,300 என உலகளவில் வெளியிடப்பட்டது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30

மோட்டோரோலா எட்ஜ் 30

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது மே 12 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் இன்று டீஸர் மூலம் தெரிவித்தது. பிளிப்கார்ட்டில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் புதிய மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே டீஸ் செய்தது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடு மைக்ரோசைட்டின்படி, இது போலெட் பேனலைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவோடு ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி உறுதி

அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி உறுதி

டுவிட்டின்படி, மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மே 12 ஆம் தேதி வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிற முக்கிய தளத்தின் மூலமாக விற்பனைக்கு வரும். போஸ்டர் தகவலின்படி, "உலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன்" என்ற முழக்கத்தோடு இந்த சாதனம் வருகிறது. ஸ்மார்ட்போனை வெளியீட்டுக்கு என பிளிப்கார்ட் தனது தளத்தில் பிரத்யேக லேண்டிங் பக்கத்தை உருவாக்கி இருக்கிறது. ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்கள் "நோட்டிபை மீ" என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம். தொடக்கம் மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த தகவலை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். அதேபோல் வெளியீட்டு நிகழ்வின் நேரம் மற்றும் ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த விவரங்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

மோட்டோரோலா எட்ஜ் 30 எதிர்பார்க்கப்படும் விலை

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடாக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இந்திய விலை ரூ.36,300 என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக அளவில் வெளியிட்ட விலையுடன் ஒப்பிட்டு இது வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் விலை மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அரோரா க்ரீன், மீடியர் க்ரே மற்றும் சூப்பர்மூன் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட அதே அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் பட்டியலில் சில தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 5ஜி இணைப்பு, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் POLED டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனானது 155 கிராம் எடையுடன் வரும் என கூறப்படுகிறது.

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மை யூஎக்ஸ் உடன் இயங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400) பிக்சல்கள் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் செயலி ஆதரவோடு 8 ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 கேமரா அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 கேமரா அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இது 50 எம்பி பிரைமரி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. செல்பி ஆதரவுக்கு என மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சத்துக்கு என பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவோடு 4020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Smartphone Launching Confirmed in India on May 12: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X