மார்ச் 4 வரை காத்திருங்கள்- விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ: ரூ.5000 கேஷ்பேக் மற்றும் சலுகைகள்!
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது மார்ச் 4 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோரோலா போன் ஆனது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவின் வாரிசாக இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் போலரைஸ்டு டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா அமைப்புகளுடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சமானது அதன் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவாகும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஆனது 'ரெடி ஃபார்' அம்சத்துடன் வருகிறது, இதன் மூலம் விண்டோஸ் 11 மடிக்கணினிகளை வீடியோ கான்பரன்சிங்கிற்காக வெப்கேமாக பயன்படுத்தலாம். மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ தற்போது இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ஒரே வேரியண்டில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.49,999 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது காஸ்மோஸ் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் ஒயிட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மார்ச் 4 முதல் பிளிப்கார்ட் மற்றும் பெரிய சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனைக்கு கிடைக்கும். மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சாதனத்துக்கான சில சிறந்த வெளியீட்டு சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.5000 தள்ளுபடி
பிளிப்கார்ட் மூலம் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும். ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலமாகவும் ரூ.5000 கேஷ்பேக் சலுகைகளை பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கும். அதேபோல் எச்டிஎஃப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கார்ட்கள் பயன்படுத்தி மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் போது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் ஒன்பது மாதங்கள் வரை கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ: அம்சங்கள்
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சாதனமானது 6.7-இன்ச் முழு-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) எல்இடி டிஸ்ப்ளேவை 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. டிஸ்ப்ளே 2.5டி வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே கைரேகை எதிர்ப்பு ஸ்க்ராட்ச் எதிர்பார்ப்பு பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முதன்மை நிலை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

மூன்று பின்புற கேமராக்கள்
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டது. இந்த முதன்மை சென்சார் ஓம்னி-டைரக்ஷனல் ஃபேஸ்-டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் உள்ள மற்ற கேமராக்களில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 60-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
இந்த மூன்று பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்ககையில் 24 எஃப்பிஎஸ் 8கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டிருக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சாதனமானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சாதனத்தின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு அம்சத்துக்காக இதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. எட்ஜ் 30 ப்ரோ ஆனது டால்பை அட்மாஸ் மூலம் டியூன் செய்யப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

4,800 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 68 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் 15 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்ய முடியும். சாதனம் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் வயர்லெஸ் பவர் ஷேரிங் உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications