Home
News

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ இந்திய அறிமுகம் எப்போது? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

லெனோவாவுக்கு சொந்தமான நிறுவனம் ஒரு டீஸர் படத்தை வெளியிட்டுள்ளது. இது மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் விரைவில் வரவிருக்கிறது என்று (இன்று) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவிக்கப்பட்டது. மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கான வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், ஃப்ளிப்கார்ட் சில தகவலை நமக்கு வழங்கியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமா?

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமா?

பிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்புப் படி, புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது. மோட்டோரோலா இந்தியா டிவிட்டர் கணக்கு, நாட்டில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகப்படுத்தப்படுவதைக் குறிக்கும் டீசரை வெளியிட்டுள்ளது . டீஸர் ஸ்மார்ட்போனின் சரியான பெயரைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், அது மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவின் மூன்று கேமரா அமைப்பைக் கொண்ட ஒரு படத்தைக் காட்டுகிறது.

மோட்டோரோலா டீஸ் செய்த டீசர்

மோட்டோரோலா டீஸ் செய்த டீசர்

இத்துடன், அந்த படம் 'An Absolute Pro' என்ற வார்த்தைகளைக் கூறி coming soon என்று டீஸ் செய்துள்ளது. மோட்டோரோலாவில் இருந்து அடுத்து வெளிவர தயாராக இருக்கும் ஸ்மார்ட்போன் என்றால் அது நிச்சயமாக மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலாக தான் இருக்க முடியும் என்பதனால், நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலை பற்றித் தான் டீஸ் செய்துள்ளது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிளிப்கார்ட் வெளியிட்ட தகவல் என்ன சொல்கிறது?

பிளிப்கார்ட் வெளியிட்ட தகவல் என்ன சொல்கிறது?

பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தனித்தனியாகப் பகிர்ந்துள்ளது. இந்த பட்டியலில் அக்டோபர் 1 ஆம் தேதிக்கான பட்டியலில் மோட்டோரோலா போன் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவைத் தவிர வேற எந்த மாடலாக இருக்கவும் வாய்ப்பில்லை என்பதனால், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ போனின் அறிமுகத்தை நாம் 1 ஆம் தேதி எதிர்பார்க்கலாம்.

விலை என்னவாக இருக்கும்?

விலை என்னவாக இருக்கும்?

ஆகஸ்ட் மாதத்தில், மோட்டோரோலா இந்தியா நாட்டின் தலைவர் பிரசாந்த் மணி நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவை விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை பற்றி பார்க்கையில், இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகைக்கு ஐரோப்பாவில் யூரோ 699.99 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 60,500 முதல் தொடங்குகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ சிறப்பம்சம்

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவின் ஐரோப்பிய பதிப்பானது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 144Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 12 ஜிபி LPDDR5 ரேம் கொண்டுள்ளது. இது 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் வருகிறது.

கேமரா மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ வண்ணம்

கேமரா மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ வண்ணம்

இது 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் 5x ஹை ரெஸ் ஆப்டிகல் ஜூம் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பெரிஸ்கோப் ஷூட்டர் 50x சூப்பர் ஜூம் ஆதரவை வழங்குவதாகக் கூறப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் இண்டிகோ வீகன் லெதர் மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 20 Pro India Launch To Be Held On October 1st Says Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X