மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

|

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. முதலில் மோட்டோ டேப் ஜி 20 வருகிற செப்டம்பர் 30 அன்று அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மோட்டோரோலாவின் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோ டேப் ஜி 20 அறிமுகம்

புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோ டேப் ஜி 20 அறிமுகம்

புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் விரைவில் வரவிருக்கிறது என்று (இன்று) மோட்டோரோலா இந்தியா டிவிட்டர் கணக்கு ஒரு டிவிட்டர் பதிவின் மூலம் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கான வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், ஃப்ளிப்கார்ட் சில தகவலை நமக்கு வழங்கியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ எப்போது அறிமுகம் தெரியுமா?

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ எப்போது அறிமுகம் தெரியுமா?

பிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்புப் படி, புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பரிந்துரைக்கிறது. இதற்கு முன்னர் மோட்டோரோலா டேப் ஜி 20 அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மோட்டோரோலா இந்தியா வெளியிட டீஸர் ஸ்மார்ட்போனின் சரியான பெயரைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவின் மூன்று கேமரா அமைப்பைக் கொண்ட ஒரு படத்தைத் தெளிவாகக் காண்பிக்கிறது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்ட டீசர்

மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்ட டீசர்

இத்துடன், அந்த படம் 'An Absolute Pro' என்ற வார்த்தைகளைக் கூறி 'coming soon' என்று டீஸ் செய்துள்ளது. மோட்டோரோலாவில் இருந்து அடுத்து வெளிவர தயாராக இருக்கும் ஸ்மார்ட்போன் என்றால் அது நிச்சயமாக மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலாக தான் இருக்க முடியும் என்பதனால், நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலை பற்றித் தான் டீஸ் செய்துள்ளது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை என்னவாக இருக்கும்?

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை என்னவாக இருக்கும்?

ஆகஸ்ட் மாதத்தில், மோட்டோரோலா இந்தியா நாட்டின் தலைவர் பிரசாந்த் மணி நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவை விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை பற்றி பார்க்கையில், இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகைக்கு ஐரோப்பாவில் யூரோ 699.99 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

இந்த போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவா?

இந்த போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவா?

இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 60,500 முதல் தொடங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோவின் ஐரோப்பியப் பதிப்பானது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 144Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 12 ஜிபி LPDDR5 ரேம் கொண்டுள்ளது. இது 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் வருகிறது.

50x சூப்பர் ஜூம் ஆதரவும் உள்ளதா?

50x சூப்பர் ஜூம் ஆதரவும் உள்ளதா?

இது 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் 5x ஹை ரெஸ் ஆப்டிகல் ஜூம் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பெரிஸ்கோப் ஷூட்டர் 50x சூப்பர் ஜூம் ஆதரவை வழங்குவதாகக் கூறப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் இண்டிகோ வீகன் லெதர் மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் வருகிறது.

மோட்டோ டேப் 8 சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

மோட்டோ டேப் 8 சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

மோட்டோ டேப் 8 சாதனம் அதன் முந்தைய மாடலான லெனோவா டேப் M8 (FHD) மாடலில் இருந்து கடன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த புதிய சாதனம் 8' இன்ச் கொண்ட 1200 x 1920 பிக்சல் உடைய முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்டிருக்கலாம்.

டேப் எவ்வளவு ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது?

டேப் எவ்வளவு ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது?

இது ஹீலியோ P22T கொண்டு இயங்கும் என்றும், இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒரு வேரியண்ட் மாடலாகவும், மற்றொரு மாடல் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்காக, இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் நிறுவனம் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் 5100mAh பேட்டரியை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Edge 20 Pro And Moto Tab G20 Will Be Available Via Flipkart After India Launch On October : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X